தடை கடந்த அரங்கேற்றம்: ஹேமா லதா ராமஸ்வாமி நிரூஸ் டென்னிஸ் அகாடமி: 10வது ஆண்டுவிழா சிகாகோ உலக இசை விழா: சித்ரவீணை ரவிகிரண் மற்றும் கிருத்திகா ராஜகோபாலன் டெக்சஸ்: சிவகாமியின் சபதம் அரங்கேற்றம்: விக்னேஷ் தியாகராஜன் அரங்கேற்றம்: நம்ரிதா நவீன் விரிகுடாப் பகுதி: அன்னை வேளாங்கண்ணித் திருவிழா பாரதி தமிழ்ச் சங்கம்: காவ்யா முரளிதரன் பரதநாட்டியம் அரங்கேற்றம்: நந்திதா குமார் அரங்கேற்றம்: அபிநயா செந்தில் அரங்கேற்றம்: ருத்ரஜீவி கோவிந்தராஜ் அரங்கேற்றம்: அபி மோஹன் அரங்கேற்றம்: நிவ்யா வேல் காமத் அரங்கேற்றம்: ப்ரணவ்யா மாணிக்கவேலு மாசசூஸட்ஸ்: சிவகாமியின் சபதம்
|
|
பாரதி தமிழ்ச் சங்கம்: பி.ஏ. கிருஷ்ணனுடன் கலந்துரையாடல் |
|
- ச. திருமலைராஜன்|அக்டோபர் 2014| |
|
|
|
|
|
ஆகஸ்ட் 9, 2014 அன்று பாரதி தமிழ்ச் சங்கம் மற்றும் சிலிக்கான் ஷெல்ஃப் புத்தக நண்பர் குழுவின் சார்பில், திரு. பி.ஏ,கிருஷ்ணன் எழுதிய 'மேற்கத்திய ஓவியங்கள்' என்ற நூல் குறித்து நூலாசிரியருடன் கலந்துரையாடல் ஏற்பாடு செய்திருந்தது. இதில் பாலாஜி ஸ்ரீநிவாசன், சுந்தரேஷ், ஆர்.வி. சுப்ரமணியன், பகவதி பெருமாள், ராஜன் சடகோபன் ஆகியோர் மதிப்புரை வழங்கினார்கள்.
மேற்கத்திய ஓவியங்களைப்பற்றிய ஒரு எளிய அறிமுகத்தைச் சாதாரண வாசகனுக்கும் அளிப்பதே இந்த நூலின் சிறப்பாகும். ஓவியர்களின் வாழ்க்கை, ஓவியங்கள் வரையப்பட்ட சமூகச்சூழல், மேற்கத்திய ஓவியங்களின் பரிணாமம் ஆகியவை சிறப்பாக இதில் சித்திரிக்கப்ப்ட்டிருக்கின்றன. தமிழில் வரும் இத்தகைய முதல் நூல் என்கிற அளவிலும் முக்கியத்துவம் கொண்டதாகிறது. அந்த வகையில் மேற்கத்திய ஓவியத்தைத் தமிழ் வாசகனுக்குக் கொண்டு சேர்ப்பதில் இந்த நூல் முதல் வரவாகிறது.
நூலாசிரியர் கிருஷ்ணன் விரிவான விளக்கங்களை வழங்கினார். "ஓர் ஓவியத்தைக் களங்கமற்ற கண்களால் பார்த்து ஒரு கலைப்பயணத்தைத் துவங்குவது, கெட்டிக்காரத்தனமாகப் பேசுவதைவிடக் கடினம் மட்டுமன்று, பயனளிப்பதும் கூட. பயணம் முடிந்து திரும்பி வரும்போது எந்தப் புதையலைக் கொண்டுவருவோம் என்று சொல்லமுடியாது". என்று அவர் குறிப்பிட்டார். |
|
பாரதி தமிழ்ச் சங்கமும், சிலிக்கான் ஷெல்ஃப் புத்தக நண்பர்கள் குழுவும் இணைந்து இப்பகுதியில் இலக்கிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துவருகின்றன. குழுவில் இணைய விரும்புவோர் தொடர்புகொள்ள: Bags Perumal
பாரதி தமிழ் சங்கத்தின் இலக்கிய நிகழ்சிகளை அறியவும் தொடர்புக்கும் தொலைபேசி: 925.307.6774 மின்னஞ்சல்: batsvolunteers@gmail.com இணைய தளம்: www.Bharatitamilsangam.org முகநூல்: facebook.com/bharatitamilsangam
திருமலைராஜன்ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா |
|
|
More