நாட்டியம்: 'தாயும் சேயும்' அரங்கேற்றம்: ஸ்ரீநிதி கலைச்செல்வன் அரங்கேற்றம்: பிரதீபா ஸ்ரீராம் மேரியட்டா தமிழ்ப்பள்ளி: சுதந்திர தினவிழா அரங்கேற்றம்: சரஸ்வதி காசி அரங்கேற்றம்: ரூபா ராமநாதன் அரங்கேற்றம்: ஹர்ஷா ஐயர் நிருத்யநிவேதன்: "Dance of Joy" டெட்ராய்ட்: தமிழ்ப்பள்ளி விழா
|
|
|
|
|
மே 25, 2014 அன்று, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி, இல்லினாய்ஸ் மாநிலத்தில், சிகாகோ பெருநகருக்கு அண்மையிலுள்ள போலிங்புரூக் நகரில், பிற்பகல் இரண்டு மணியளவில் இல்லினாய்ஸ் தமிழ் மனித உரிமைகள் இயக்கத்தினரால் நடத்தப்பட்டது.
2009 மே மாதம் இலங்கை முள்ளிவாய்க்கால் பகுதியில் நடைபெற்ற போரில் உயிரிழந்த மக்களின் ஞாபகார்த்தமாக போலிங்புரூக் நகரப் பூங்காவில், ஒரு மரம் நட்டுப் பராமரிக்கப்படுகிறது. இலங்கையில் நடந்த இறுதியுத்தத்தில் உயிர்நீத்த தமிழர்களுக்கு 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தியதோடு, நூற்றுக்கு மேலான சிறாரும் பெரியவர்களும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் அமெரிக்கக் காங்கிரஸ் பிரதிநிதி திரு. பில் போஸ்டர் பங்கேற்று உரையாற்றினார். போர்க்காலத்தில் அங்கே இடையறாது மருத்துவ சேவை செய்த வைத்தியர் தி. வரதராசன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு, தாம் கண்ட துன்பங்களை எடுத்துக் கூறினார்.
போலிங்புரூக் நகரின் உதவி மேயர் திரு. லீரோய் ஜே பிரவுன், பூங்காவின் ஆணையர்சபைத் தலைவர் சூ வஸ்தலோ ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். மேலதிக விபரங்களுக்கு: sites.google.com/site/memorialtree |
|
ஸ்கந்தகுமார், சிகாகோ, இல்லினாய்ஸ் |
|
|
More