அரங்கேற்றம்: சங்கவை கணேஷ் சிகாகோ: வறியோர்க்கு உணவு அரங்கேற்றம்: அனிகா ஐயர் BATM: முத்தமிழ் விழா பாரதி தமிழ்ச் சங்கம்: அன்னபூர்ணா அரங்கேற்றம்: தீக்ஷா கந்தன் கலியன் சம்பத் இலக்கிய உரை கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்: இயல் விருது விழா நியூ ஜெர்சியில் அன்னை மரியின் தேர்த்திருவிழா டொரொன்டொ: 'ஸ்டார் நைட்' நாடகம் பராசக்தி ஆலயம்: வைகாசி விசாகத் திருவிழா அரங்கேற்றம்: மதுரா ராமகிருஷ்ணன் சுதேசி ஐயா
|
|
|
|
ஜூன் 21, 2014 அன்று சியாட்டல் தமிழ்ச்சங்கத்தின் சார்பில், திரு. சகா நாதனின் எட்டாவது புத்தகமான 'Relationship solutions - A Spiritual way' நூலின் வெளியீடு Bellevue Eastside Bahai Center அரங்கில் நடைபெற்றது. குரூப்பன் நிறுவனத் தலைவர் திரு. கல். இராமன் நூலை வெளியிட திரு. லேனா தமிழ்வாணன் பெற்றுக்கொண்டார்.
முதலில் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு. இராமு ஜெயகுமார் வரவேற்புரையாற்றினார். 25ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சங்கத்தின் செயல்பாடுகளை அவர் விரிவாக எடுத்துரைத்தார். பின்னர் கல் இராமன் நூலை வெளியிட்டுப் பேசினார். சிறப்பு அழைப்பாளார் லேனா தமிழ்வாணன் "அமைதியான வாழ்க்கைக்கு ஆதாரம் தியானமும் யோகமும்" என்று சொல்லியிருப்பது படிப்பவர்களைச் சுயபரிசோதனை செய்யத் தூண்டும்" என்று குறிப்பிட்டார். அவர் 'வாழ வழிகாட்டும் இலக்கியச் செல்வங்கள்' என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.
நிறைவாகப் பேசிய சகா நாதன், உடல் உறுதியோடு மன அமைதியை உறுதி செய்வதே, நாமனைவரும் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் வாழ வழி வகுக்கும் என்று கூறினார். தமக்குத் துணை நின்ற தமிழ்ச்சங்கம், முக்கிய விருந்தினர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். |
|
நிகழ்ச்சியைச் சங்கத் துணைப் பொருளாளரும் குறிஞ்சி மின்னிதழின் ஆசிரியையுமான திருமதி. குணமொழி ஹரிசங்கர் தொகுத்து வழங்கினார். மேலும் நூலாசிரியரைப் பற்றி அறிய: thenewbeginningnow.com/our-authors
ச. பார்த்தசாரதி, சியாட்டல், வாஷிங்டன் |
|
|
More