Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | அஞ்சலி | முன்னோடி | ஜோக்ஸ் | சமயம் | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
சங்கம் ஆர்ட்ஸ்: 'The Prophet'
TNF ஆஸ்டின்: சங்கவை கணேஷ் நடனம்
BATM: முத்தமிழ் விழா
நாட்யா: மக்களுக்காக மக்களிடையே....
- செய்திக்குறிப்பிலிருந்து, நித்யவதி சுந்தரேஷ்|ஜூலை 2014|
Share:
சிகாகோவில் இயங்கி வரும் நாட்யா நடனப்பள்ளி வருமாண்டில் தனது 40வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. நாட்யாவின் முதல்வர் திருமதி. ஹேமா ராஜகோபாலன் இதனைச் சிறப்பாகவும், அதே சமயம் தனித்துவம் நிறைந்ததாகவும் கொண்டாடத் திட்டமிருக்கிறார். இந்தியப் பாரம்பரிய நடனமான பரதத்துடன், ஏனைய கலைகளையும் இணைத்து பலதரத்துப் பார்வையாளர்களுக்கும் நிகழ்ச்சிகள் வழங்க உள்ளார்.

இந்த ஆண்டில் சிகாகோவில் நான்கு பூங்காக்களில் நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர். 'சிகாகோ பார்க் டிஸ்டிரிக்ட்' உடன் இணைந்து ஜூலை முதல் செப்டம்பர்வரை 'நைட் அவுட் இன் தி பார்க்' என்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நிகழ்ச்சிகளை நடத்துவர். பொருளாதாரத்தின் அடித்தட்டு நிலையில் இருக்கும் மக்கள் வாழும் இடங்களை இந்த நிகழ்ச்சிகள் சென்றடையும் என்பது குறிப்பிடத் தக்கது. “பல தட்டு மக்களிடமும் நம் கலைகளைக் கொண்டு செல்வது ஒவ்வொரு கலைஞனின் பொறுப்பு” என்கிறார் ஹேமா.

சுமார் 175 மாணவர்களைக் கொண்டுள்ள நாட்யா, சிகாகோவில் உள்ள அருங்காட்சியகம், கலாசார மையங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், முதியோர் இல்லங்கள் ஆகியவற்றில் நிகழ்ச்சிகளை நடத்துகிறது. நாட்யாவின் நிகழ்ச்சிகள் எல்லா வயதினர்க்கும் ஏற்றதாகவும், இலவசமாகவும் இருப்பதால் அனைவரையும் எட்டுவது எளிதாகிறது. பத்து வருடங்களாகச் சிகாகோ அரசுப் பள்ளிகளில் நாட்யா நடனம் பயில்விக்கிறது .

மேயர் ராம் இம்மானுவேலின் ஒத்துழைப்புடன் நடைபெறும் 'நைட் அவுட் இன் தி பார்க்' நகரின் 250 இடங்களில் சுமார் ஆயிரம் நிகழ்ச்சிகளாக நடக்கும். நடனம், இசை, திரைப்பட, மேஜிக் ஷோ என்று பலவகை நிகழ்ச்சிகளும் இதில் அடங்கும்.
நாட்யா பங்கேற்கும் நிகழ்ச்சிகள்:
Margam – The Sacred Path, Dance Theatre of India
ஜூலை 25, 2014, வெள்ளிக்கிழமை, மாலை 7:00 மணி
South Shore Cultural Center, 7059 S. South Shore Dr.

Timeless Tales – Myths and Legends of India
ஆகஸ்ட் 2, 2014, சனிக்கிழமை, மாலை 3:00
Austin Town Hall Park, 5610 W. Lake St.

Musical Theatre – Ragas Interpreting the Colors of Emotions
ஆகஸ்ட் 16, சனிக்கிழமை, மதியம் 12:30 மணி
Humboldt Park Fieldhouse, 1400 N. Sacramento Ave.

Love Beyond Reach
செப்டம்பர் 13, 2014, சனிக்கிழமை, மாலை 7:30 மணி
Indian Boundary Park, 2500 W. Lunt Ave.

மேலும் விவரங்களுக்கு: www.natya.com
தகவல்: செய்திக்குறிப்பு
தமிழில்: நித்யவதி சுந்தரேஷ்
More

சங்கம் ஆர்ட்ஸ்: 'The Prophet'
TNF ஆஸ்டின்: சங்கவை கணேஷ் நடனம்
BATM: முத்தமிழ் விழா
Share: 




© Copyright 2020 Tamilonline