கோதுமை பிடிகொழுக்கட்டை ஓட்ஸ் பிடிகொழுக்கட்டை
|
|
|
|
|
அரிசி பிடிகொழுக்கட்டை
தேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி - 1 கிண்ணம் துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி தேங்காய்த்துருவல் - 1 தேக்கரண்டி காராமணி - 1 தேக்கரண்டி பச்சை மிளகாய் - 3 கடுகு - தாளிக்க உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி எண்ணெய் - 2 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப தண்ணீர் - 2 கிண்ணம்
செய்முறை புழுங்கலரிசியையும் துவரம் பருப்பையும் மிக்சியில் போட்டு ரவையாகப் பொடித்துக் கொள்ளவும். காராமணியை லேசாக வறுத்து, வேகவைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய் போட்டு வதக்கி, பிறகு காராமணி, தேங்காய்த்துருவல் போட்டு, தண்ணீர் விட்டு உப்புப் போடவும். தண்ணீர் கொதி வந்தவுடன் ரவையைப் போட்டுக் கிளறவும். கெட்டியானதும் அடுப்பை அணைத்து கீழே இறக்கி வைத்துக் கொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லித் தட்டில் வைத்து, பத்து, பன்னிரண்டு நிமிடங்கள் வேகவைத்து இறக்கவும். சூடான பிடி கொழுக்கட்டை தயார். குழந்தைகளுக்கு ஏற்ற உணவு. |
|
கமலா சுவாமிநாதன் |
|
|
More
கோதுமை பிடிகொழுக்கட்டை ஓட்ஸ் பிடிகொழுக்கட்டை
|
|
|
|
|
|
|