BATM: சித்திரைத் திருவிழா டாலஸ்: ப்ளேனோ தமிழ்ப் பள்ளி ஆண்டு விழா பாரதி தமிழ்ச் சங்கம்: தமிழ்ப் புத்தாண்டு அரங்கேற்றம்: சமீஹிதா மோஹன் டாலஸ்: தமிழ் இசை விழா விருந்தாவன் நாட்டிய அகாடமி: ஆண்டு விழா விரிகுடாக் கலைக்கூடம்: திருக்குறள் விழா லட்சுமி தமிழ் பயிலும் மையம்: ஆண்டு விழா சான் ஹோசே: ஸ்ரீராஜராஜேஸ்வரி ஆலயத் திறப்பு விழா பரதநாட்டியம்: அபூர்வா பரந்தாமன் பாரதி தமிழ்ச் சங்கம்: புதிய நிர்வாகிகள்
|
|
|
|
|
ஏப்ரல் 26, 2014 அன்று தமிழ்நாடு அறக்கட்டளையின் நியூ ஜெர்சி கிளை திறப்பு விழா நடந்தது. விழாவில் 'பஞ்ச தந்திரம்' என்ற தலைப்பில் ஸ்டேஜ் ஃப்ரெண்ட்ஸ் நாடகக் குழுவினர் ஒரு நகைச்சுவை நாடகம் வழங்கினர். இந்த நாடகக் குழு கடந்த 21 வருடங்களாக அமெரிக்காவில் நாடகங்களை நடத்தி வருகிறது.
இந்த விழாவில், 'தென்றல்' எழுத்தாளர் மரு. வரலட்சுமி நிரஞ்சன் அவர்களின் 'வாழ்க்கை ஒரு பயணம்' என்ற கவிதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. இதனைக் கவிஞர் திரு. இலந்தை ராமசுவாமி வெளியிட, விவேகானந்தா கல்லூரி முன்னாள் முதல்வர், பேரா. வ.வே.சு. முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார். |
|
இந்த நாடகமும், கவிதை நூலும் தமிழ்நாடு அறக்கட்டளையின் திட்டமான 'அன்பாலயம்' என்ற மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் பள்ளிக்கு நிதி திரட்டப் பயன்படுகிறது. இந்தப் பள்ளி சீர்காழியில் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது சுமார் 60 பிள்ளைகள் வசிக்கின்றனர். உதவ விரும்புவோர் $10 அன்பளிப்பாகத் தந்து கவிதை நூலைப் பெறலாம். அல்லது, மூன்று வேளை அன்னதானம் வழங்க $100 அளித்தால் புத்தகம் இலவசம். அதற்கு மேல் $250 அல்லது $500, $1000 அளிக்க விரும்புவோருக்கும் திட்டங்கள் உள்ளன. (Tax deductable checks are payable to 'Tamil Nadu Foundation').
புத்தகம் வாங்க, நன்கொடை அளிக்க, தகவல் பெற: மின்னஞ்சல் - vvaralak@yahoo.com
இரமேஷ் நாச்சியப்பன், கனெக்டிகட் |
|
|
More