சிகாகோ தமிழ்ச் சங்கம்: பல்சுவை திருவிழா இஷா இசை: 'என்றென்றும் ராஜா' BATM: மெல்லிசை நிகழ்ச்சி பரதநாட்டியம்: ஷ்ரேயா ரமேஷ் விலா கருணா: பத்தாண்டு நிறைவு விழா சான் டியேகோவில் பாரதியார் தமிழ்ப்பள்ளி கர்நாடிக் மியூசிக் ஐடல் அமெரிக்கா - சீசன் 3 OVBI: வளமான பாரதத்தை உருவாக்க கனெக்டிகட் தமிழ் மையம் துவக்கம் சிகாகோ: 'ஹனிமூன் கப்பிள்ஸ்' நாடகம் மிசோரி: தமிழிசை விழா வாழும் கலை: சர்வதேச அமைதி தினம் கனெக்டிகட்: நிதிக்கொடை இசைமழை வேளாங்கன்னி மாதா திருவிழா அரங்கேற்றம்: சுமனா கிருஷ்ணகுமார் அரங்கேற்றம்: ராஜி வெங்கட் அரங்கேற்றம்: ஸ்வேதா, ஆர்த்தி
|
|
இன்னர் எஞ்சினியரிங் - சத்குரு வழங்கிய நல்வாழ்வுத் தொழில்நுட்பம் |
|
- |நவம்பர் 2013| |
|
|
|
|
|
அக்டோபர் 11, சான் மாட்டியோ: ஒரு பெரிய கண்காட்சி வளாகம், உள்நிலை ஆனந்தத்தை உணரும் சொர்க்க பூமியாக மாறுகிறது. பலதரப்பட்டோரும் இந்தியாவின் சிறந்த யோகியும் ஞானியுமான சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களைக் காண இங்கே ஒன்றுகூடுகின்றனர். அடுத்த நான்கு நாட்களுக்கு உள்நிலை மாற்றத்துக்கான செயல்முறைகள் நடைபெறுகின்றன. வந்திருந்தோர், ஈஷா அறக்கட்டளை மற்றும் மனிதநேய ஆர்வலராக மக்களிடையே பரிச்சயமான சத்குரு ஜக்கி வாசுதேவ் பற்றி அறிந்திருந்தனர். ஈஷா அறக்கட்டளை கல்வி, ஆரோக்கியம், சுற்றுச்சூழல் போன்ற சேவைகளிலும், முறையான யோகம் மற்றும் தியானம் கற்றுத்தருவதிலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது.
ஈஷாவின் உட்பொறியியல் வகுப்பில் போதனைகளோ பாடங்களோ வழங்கப்படுவதில்லை. மாறாக, ஒவ்வொருவரும் தமது வாழ்வின் அடிப்படையை மதிப்பீடு செய்து பார்ப்பதற்கான வாய்ப்பாக அமைகிறது. சத்குரு அவர்கள், "பொருள்சார் வாழ்க்கையின் நலத்துக்கு அறிவியல் தொழில்நுட்பம் உள்ளதைப் போல், உள்நிலை நல்வாழ்விற்கும் அறிவியல் தொழில்நுட்பம் உள்ளது" என்கிறார்.
"உட்பொறியியல் வகுப்பின்மூலம் யோகம் கூறும் உடலின் ஐந்து அடுக்குகளை எப்போதும் சீரான அலைவரிசையில் இருக்கும்படிச் செய்ய முயற்சிக்கிறோம். அப்போது பேரானந்தம் என்பது தற்செயல் நிகழ்வாக இல்லாமல், வாழ்வின் இயல்பாக இருக்கும்" என்று சமீபத்திய உரையில் சத்குரு அவர்கள் கூறினார்கள். சான் மாட்டியோவில் கற்றுத் தரப்பட்ட ஷாம்பவி மஹாமுத்ரா எனப்படும் 21 நிமிட யோகப்பயிற்சி, உடல், மனம், சக்தி ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் அற்புதப் பயிற்சியாகும். இதைக் கற்றுணர்ந்தவர்கள், தங்கள் உடல்நிலை, சக்திநிலை, மூச்சு, ஆசனம், ஒலி, உண்ணும் உணவு ஆகியவற்றில் இப்பயிற்சி ஏற்படுத்திய மாற்றத்தை உணர்ந்ததாகக் கூறினர். |
|
இடையிடையே கேள்வி-பதில், கருத்துப் பரிமாற்றம், விவாதம் ஆகியவையும் நடைபெற்றன. சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா இசைக் குழுவின் துள்ளலிசை அங்கிருந்த அனைவருக்கும் உயிர்ப்பூட்டியது; சுவையான விளையாட்டுப் போட்டிகள் இனிய சூழலை ஏற்படுத்தின.
கலிஃபோர்னியாவைத் தொடர்ந்து, சத்குரு பல வணிக, தலைமைப் பண்பு வளர்க்கும் நிகழ்ச்சிகளில் உரையாற்றக் கிழக்குக் கடற்கரைக்குப் பயணம் செய்கிறார். மீண்டும் 2014ல் வசந்த காலத்தில் சத்குரு அமெரிக்காவின் பல முக்கிய நகரங்களில் இன்னர் எஞ்சினியரிங் வகுப்பை வழங்க வரவிருக்கிறார். தேர்ந்த ஈஷா யோக ஆசிரியர்கள் நாட்டின் பல நகரங்களிலும் இன்னர் எஞ்சினியரிங் நிகழ்ச்சியைக் கற்றுத்தருவதைத் தொடர்வார்கள். உலகமுழுவதும் இணையதளம் வழியாகவும் இப்பயிற்சி முறை வழங்கப்படுகிறது. சத்குருவின் பயண விவரம் மற்றும் விவரங்களுக்கு: www.ishafoundation.org
செய்திக் குறிப்பிலிருந்து |
|
|
More