'இளையராகம்' வழங்கும் தமிழ்த் திரையிசை தென்கலிஃபோர்னிய தமிழ்ச் சங்கம்: தீபாவளிக் கொண்டாட்டம் மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம் நந்தலாலா மிஷன்: 'பரமப்ரேமா' இசை நிகழ்ச்சி சிகாகோ தங்க முருகன் விழா
|
|
சான்ஃபிரான்சிஸ்கோ: '3rd i' வழங்கும் தெற்காசியத் திரைப்பட விழா |
|
- ராஜி ராமச்சந்திரன், லக்ஷ்மி ஷங்கர்|நவம்பர் 2013| |
|
|
|
|
|
நவம்பர் 6-10, 2013 சான்ஃபிரான்சிஸ்கோ
நவம்பர் 16, 2013 பாலோ ஆல்டோ பிரபல திரைப்பட நிறுவனங்களைச் சாராமல், திரைப்பட ஆர்வலர்களால் தனிப்பட்ட முறையில் தயாரிக்கப்பட்ட படங்களைத் திரையிடுவது '3rd I'யின் (www.thirdi.org) நோக்கம். இந்த ஆண்டில் நடைபெறவிருக்கும் 11வது தெற்காசியத் திரைப்பட விழாவில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் தயாரிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.
வியாழன், நவம்பர் 7, இரவு 7:15 மணி, நியூ பீப்பிள் திரையரங்கம், சான்ஃபிரான்சிஸ்கோ: Mohammed to Maya, (அமெரிக்கா, 2012, 54 நிமிடம்), ஜெஃப் ராய். இஸ்லாமியத் தமிழர் முகமதுவின் வாழ்க்கையில் ஒரு வருடம். அவர் சிங்கப்பூருக்குப் போய் பாலின மாற்ற அறுவை சிகிச்சை செய்து கொண்டு, மாயா என்ற மங்கையாக மாறுவதைத் துல்லியமாகச் சித்தரிக்கிறது.
Performing Girl, (அமெரிக்கா, 2013, 25 நிமிடம்), கிரெஸெண்ட் டயமண்ட். இந்தக் குறும்படம் இலங்கைத் தமிழ்த் திருநங்கையும், ஆடல், பாடல் கலைஞருமான டீலோவின் வாழ்க்கையைத் தத்ரூபமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.
வெள்ளி, நவம்பர் 8, இரவு 9:50 மணி, நியூ பீப்பிள் திரையரங்கம், சான்ஃபிரான்சிஸ்கோ: சிம்பிள் சூப்பர்ஸ்டார், (கனடா, 2013, 94 நிமிடம்), வில்பர் சற்குணராஜ்.
இந்தியாவின் முதல் யூட்யூப் நட்சத்திரமான வில்பர் சற்குணராஜ் வெள்ளித்திரையில் அரங்கேறுகிறார்! நாட்டுப்புறத்தில் பிறந்த சாதாரண மனிதன் ஒருவன் வெற்றியைத் தேடி ஊரைவிட்டு வெளியேறும்போது பல இன்னல்களை எதிர்கொள்கிறான். கேலி, கிண்டல்களைச் சமாளிக்கிறான். காதலர்களுக்குள் இருக்கும் பிணக்கைப் பேசிச் சரிசெய்கிறான். வாயில் நீர் ஊற வைக்கும் மதுரைக் கோரிபாளையச் சிக்கன் 65ஐப் பற்றியும் விறுவிறுப்புடன் பாடுகிறான்! கலவையான இசைப்படம் உங்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும். சாதாரண மனிதனாலும் சாதிக்க முடியும் என்பதைப் புரிய வைக்கும்! |
|
ஞாயிறு, நவம்பர் 10, பிற்பகல் 3:15 மணி, நியூ பீப்பிள் திரையரங்கம், சான் ஃபிரான்சிஸ்கோ With You Without You, (இலங்கை/இந்தியா, 90 நிமிடம்), பிரசன்னா விதானகே
தன்னைத் தனிமைப் படுத்திக் கொண்டு வாழும் அடகுக் கடைக்கார சரத்சிரி, புரியாத புதிரான பேரழகி செல்வியைக் கண்டதும், “அப்பாடா! கடைசியாக நம் கடந்த காலச் சோக நினைவுகளிலிருந்து தப்பிக்க ஒரு வழியைக் கண்டு பிடித்து விட்டோம்” என்று எண்ணுகிறான். ஆனால் பழங்கால நண்பனின் எதேச்சை வருகை, இருவரும் இலங்கை உள்நாட்டுச் சண்டையில் எதிரெதிர் இனங்களைச் சார்ந்தவர்கள் என்பதைப் புரியவைக்கிறது. அந்த அன்புத் தம்பதிகளின் மனதுக்குள் சாத்தான் புகுந்து, முரண்பாடு என்ற படுகுழியில் தள்ளப்பட்டுத் தவிக்கிறார்கள்.
கட்டுக்கோப்பான கதை, ஆழமான அளவான வசனம், மனதை உலுக்கும் காட்சிகள் என இப்படம் நம்மை இலங்கையின் தனித் திரைப்படத் துறையின் உச்சிக்கே அழைத்துச் சென்று விடுகிறது.
நுழைவுச் சீட்டுக்கும், படங்களைப் பற்றி மேலும் அறியவும்: www.thirdi.org தொலைபேசி: 510.529.8917 மின்னஞ்சல்: anuj3rdi@gmail.com
வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம், பாரதி தமிழ்ச் சங்கம் மூலம் வாங்கப்படும் நுழைவுச் சீட்டுக்கு 3 டாலர் சிறப்புத் தள்ளுபடி, விழா அனுமதிச் சீட்டுக்கு (Pass) 10 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி.
ஆண்டுதோறும் தென்றல்/தமிழ் ஆன்லைன் அறக்கட்டளையின் நிதியுதவி பெறும் நிறுவனங்களுள் '3rd i' ஒன்று.
தகவல்: ராஜி ராமச்சந்திரன் தமிழில்: லக்ஷ்மி ஷங்கர், அட்லாண்டா, ஜார்ஜியா |
|
|
More
'இளையராகம்' வழங்கும் தமிழ்த் திரையிசை தென்கலிஃபோர்னிய தமிழ்ச் சங்கம்: தீபாவளிக் கொண்டாட்டம் மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம் நந்தலாலா மிஷன்: 'பரமப்ரேமா' இசை நிகழ்ச்சி சிகாகோ தங்க முருகன் விழா
|
|
|
|
|
|
|