தெரியுமா?: 'பொன்விலங்கு' ரேடியோ நாடகம் தெரியுமா?: சங்கீத நாடக அகாதமி யுவ விருது: அபிஷேக் ரகுராம் தெரியுமா?: காஞ்சி காமகோடிபீட ஆஸ்தான வித்வானாக மது வெங்கடேஷ் கி.வா.ஜவின் சிலேடைகள் மறக்க முடியாத தீபாவளி வெள்ளிக் கூஜா
|
|
தெரியுமா?: 'பொன்னியின் செல்வன்' ஒலிப் புத்தகம் |
|
- |நவம்பர் 2013| |
|
|
|
|
|
பிரபல நாடக இயக்குநர் பாம்பே கண்ணன், கல்கியின் பொன்னியின் செல்வனை ஒலிப்புத்தகமாக (ஆடியோ சிடி) தயாரித்து வெளியிட்டிருக்கிறார். ஏற்கனவே கோமல் சுவாமிநாதன், சுஜாதா, பாக்கியம் ராமசாமி போன்றவர்களின் படைப்புகளை டெலிஃபிலிம் ஆக்கி அளித்த அனுபவம் கொண்ட இவர், "பூரம் சிறுகதைகள்", "சிவகாமியின் சபதம்" உள்ளிட்ட பலவற்றை ஒலிநூலாக வெளியிட்டிருக்கிறார். பல்லாண்டு உழைப்பில் 'பொன்னியின் செல்வன்' ஆடியோ சிடியை உருவாக்கியுள்ளார். அறுபதுக்கும் மேற்பட்ட நாடக/தொலைக்காட்சி நடிகர்களின் குரலில் கல்கியின் கதாபாத்திரங்களை ஒலிவடிவில் உலவ விட்டுள்ளனர். கல்கியின் வசனங்களை மாற்றாமல், அவர் எழுதிய பாடல்களையும் சேர்த்து சுமார் 78 மணி நேரம் ஒலிக்கும் இந்த ஒலிப்புத்தகம் மூன்று குறுந்தகடுகளாக வெளி வந்துள்ளது. தொழிலதிபர் டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார் தலைமையில் கல்கியின் பேத்தி சீதா ரவி, எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், திரைப்பட நடிகை சுஹாசினி மணிரத்தினம் ஆகியோர் முன்னிலையில் இது வெளியிடப்பட்டது. ஆடியோ சி.டி. வாங்க: பாம்பே கண்ணன்; செல்பேசி எண், 9841153973. |
|
ஆன்லைனில் வாங்க: www.nammabooks.com/Ponniyin-Selvan-Audio-Book |
|
|
More
தெரியுமா?: 'பொன்விலங்கு' ரேடியோ நாடகம் தெரியுமா?: சங்கீத நாடக அகாதமி யுவ விருது: அபிஷேக் ரகுராம் தெரியுமா?: காஞ்சி காமகோடிபீட ஆஸ்தான வித்வானாக மது வெங்கடேஷ் கி.வா.ஜவின் சிலேடைகள் மறக்க முடியாத தீபாவளி வெள்ளிக் கூஜா
|
|
|
|
|
|
|