எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம் இயல் இசை நாட்டியம் இந்தியா கம்யூனிடி மையத்துடன் சேவத்தான் எளியோர்க்கு உணவு நகரத்தார் மாநாடு - 2013 அரங்கேற்றம்: ரிதிகா ஐயர் அரங்கேற்றம்: அமியா பிரசாத், அன்யா பிரசாத் அரங்கேற்றம்: சௌந்தர்யா ஜெயராமன் அரங்கேற்றம்: ரசனா தேஷ்பாண்டே அரங்கேற்றம்: வீணா கணபதி அரங்கேற்றம்: ஷிபானி சுப்பிரமணியன்
|
|
|
|
|
ஆகஸ்ட் 17, 2013 அன்று, டாலஸின் ஒய்ட் ராக் லேக் பகுதியில் 'விபா' நடத்திய ஓட்டம் மற்றும் நடைப் பந்தய நிகழ்ச்சிகளின் மூலம், அமெரிக்கக் குழந்தைகள்நலத் திட்டத்திற்காக 31,000 டாலர் நிதி திரட்டப்பட்டது. சுமார் 350 பேர் போட்டிகளில் பங்கேற்றார்கள். விபா ஒரு லாப நோக்கமற்ற, தன்னார்வச் சேவை அமைப்பு. அமெரிக்காவில், சமஉரிமை கிட்டாத குழந்தைகளுக்குக் கல்வி, ஆரோக்கியம் மற்றும் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவது விபாவின் நோக்கமாகும். 1991ல் தொடங்கப்பட்ட விபா, இதுவரை சுமார் 150,000 குழந்தைகளின் வாழ்வில் மாற்றம் ஏற்படக் காரணமாயிருந்துள்ளது.
அட்லாண்டா மாநிலத்தில் 1998ல் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போட்டிகள், வாஷிங்டன் DC , லாஸ் ஏஞ்சலஸ், சாக்ரமென்டோ, டாலஸ் போன்ற 9 இடங்களில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதன் மூலம் திரட்டிய நிதி டாலஸ் மாநகரப் பகுதிக்குட்பட்ட ப்ளேனோ நகரத்திலுள்ள ஆதரவற்ற குழந்தைகளின் நலத்திட்டங்களுக்குச் செலவிடப்படுகிறது. |
|
மேலும் தகவல்களுக்கு: vibha.org
டாக்டர் தீபா ராஜ், டாலஸ், டெக்சஸ் |
|
|
More