தெரியுமா?: தமிழ்பாடும் பெண் தெரியுமா?: சாகித்ய அகாடமியின் யுவபுரஸ்கார் தெரியுமா?: டாலஸ் ஃப்ரிஸ்கோவில் புதிய தமிழ்ப் பள்ளி தெரியுமா?: பாலபுரஸ்கார் படிக்கலாம் சிரிக்கக் கூடாது! தெரியுமா?: அமெரிக்கத் தமிழ்ப் பள்ளிகள்
|
|
தெரியுமா?: மேரியட்டா தமிழ்ப்பள்ளி |
|
- உமா பாபா|செப்டம்பர் 2013| |
|
|
|
|
|
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் இயங்கிவரும் மேரியட்டா தமிழ்ப்பள்ளியின் 2013-14ம் ஆண்டுக்கான தமிழ் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை மற்றும் கல்வியாண்டு துவக்க விழா ஆகஸ்டு-11 அன்று நடைபெற்றது. இவ்வாண்டு முதல் நிறைய மாணவர்கள் பயன்பெறும் வகையில், அதிக இடவசதியுடன் கூடிய ஹை டவர் நடுநிலைப் பள்ளியில் ஆகஸ்டு 18 அன்று வகுப்புகள் துவங்கின. பள்ளியின் முதல்வர் திரு. முரளிதரன் சுந்தரேசன் அவர்கள் தலைமையில் கல்விக்குழு உறுப்பினர்கள் சுமார் 75 குழந்தைகளுடன், புதிய மாணவர்கள் சேர்க்கை, தமிழ்ப்பாட நூல் வழங்குதல், உயர்தரத் தமிழ்க்கல்வி போன்ற திட்டங்களுடன் களமிறங்கியுள்ளனர். தற்போது 3 வயது முதல் 13 வயது வரையிலான குழந்தைகள் இங்கு தமிழ் பயில்கிறார்கள். மேரியட்டா நகரில் வசிக்கும் தமிழ் பயில விரும்புவோர் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலதிகத் தகவல்களுக்குப் பள்ளி முதல்வர் மின்னஞ்சல் முகவரி: mts.principal@gmail.com |
|
உமா பாபா, மேரியட்டா, ஜார்ஜியா, அட்லாண்டா |
|
|
More