13,685 கோடி ரூபாய் நிதியுதவி கேட்கும் தமிழகம் வெள்ள நிவாரணமும், உயிர் பலியும்! அரசியலில் குதிக்கும் கார்த்திக் ஏட்டிக்குப் போட்டி
|
|
ஜெயேந்திரர் மீது மற்றுமொரு வழக்கு |
|
- கேடிஸ்ரீ|ஜனவரி 2006| |
|
|
|
திருவாரூர் மாவட்டம் பெரியகுடியில் உள்ள அகத்தீஸ்வரர் கோயிலில் இருந்த சிவலிங்கம் மற்றும் விலை மதிப்புமிக்க கற்களை ஜெயேந்திரர் எடுத்துச் சென்று விட்டதாகக் கோட்டூர் காவல்நிலையத்தில் சுரேஷ் என்பவர் புகார் அளித்தார். அந்தப் புகாரைக் காவல்துறை பதிவு செய்ததை அடுத்து ஜெயேந்திரர் தனக்கு முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அவரின் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி சர்தார் சகாரியா உசேன், விசாரணையின் முடிவில் நீதிபதி ஜெயேந்திரருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதுமட்டுமல்லாமல் இதே வழக்கு சம்மந்தப் பட்ட மேலும் ஏழு பேருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது குறிப்பிடத்தக்கது. |
|
புகாரைப் பதிவுசெய்ததில் ஏற்பட்ட கால தாமதமும் ஆலயத்தின் தற்போதைய நிர்வாகிகள் எவரும் புகார் மனுதாரரில் இல்லை என்பதும் புகாரிலிருக்கும் உண்மை குறித்து ஐயத்தை ஏற்படுத்துவதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
கேடிஸ்ரீ |
|
|
More
13,685 கோடி ரூபாய் நிதியுதவி கேட்கும் தமிழகம் வெள்ள நிவாரணமும், உயிர் பலியும்! அரசியலில் குதிக்கும் கார்த்திக் ஏட்டிக்குப் போட்டி
|
|
|
|
|
|
|