பார்வையற்றோருக்கு உதவ 'சூர்தாஸ்' நாட்டிய நாடகம் தமிழ்ப் பள்ளி மாணவர் சேர்க்கை ஹூஸ்டன்: உதவும் கரங்களுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி பன்னாட்டுப் புறநானூறு மாநாடு
|
|
|
|
|
ஆகஸ்ட் 17, 2013 அன்று சவிதா சாஸ்திரியின் 'யுத்' சோலோ நடன நாடகம் சான் ஹோசேயின் மெக்சிகன் ஹெரிடேஜ் சென்டரில் நடைபெற உள்ளது. இதனை சங்கம் ஆர்ட்ஸ் வழங்குகிறது. சங்கம் ஆர்ட்ஸ், ஸ்டான்ஃபோர்ட் முன்னாள் மாணவிகளும் பரதநாட்டியக் கலைஞர்களுமான சந்தியா கல்யாணசுந்தரம் மற்றும் உஷா ஸ்ரீனிவாசனால் நிறுவப்பட்டது. வேறுபட்ட கலாசாரங்களுக்கு இடையே வலுவான இணைப்புகளை உருவாக்கி கலைகளை வளர்ப்பதுதான் இவர்கள் நோக்கம். இதற்காகப் பல்வேறு நடனமரபுகளிலிருந்து நடனக் கலைஞர்கள், இசை வல்லுநர்கள், எழுத்தாளர்களை இணைத்துக் கதம்பக் கலாசார நிகழ்ச்சிகளைத் தரத் திட்டமிட்டுள்ளார்கள். இவ்வழியில் 'யுத்' ஒரு முன்னோடி.
மூங்கில் காட்டில் குழலோசை கேட்காத நாட்கள் அவை. சிதைந்த உணர்வுகளோடு இருண்ட குகையுள் புதைந்த நாட்களும் கூட. ஒரு பக்கம் மனிதர்களை நிர்ப்பந்திக்க சாத்தானின் வலை விரிந்து பரந்து புறப்படுகிறது மறுபக்கம். பல்வேறு உணர்வுகள் கொண்ட மனிதர்களுக்குள்ளேயே சாத்தானும் கடவுளும் இணைந்துள்ளார்கள். மனிதனுக்குள் நடைபெறும் போராட்டமே யுத்தம். 'யுத்' என்கிற நடன அமைப்பு தெய்வீக நிதி பற்றிக் கேள்விகளை எழுப்புகிறது. வார்த்தைகளுக்கு வரம்பு உண்டு. மனித வாழ்க்கையில் ஸ்தம்பிக்க வைக்கும் நிகழ்வுகள் ஏற்படும்போது கலைஞர்கள் சொற்களுக்கு அப்பாற்பட்ட ஒரு மொழியைத் தேர்வு செய்கிறார்கள். சவிதா சாஸ்திரிக்குப் பிடித்த மொழி பரதநாட்டியம். மூன்று கோணங்களில் இருந்து ஒரு சிறு பெண் குழந்தையின் வாழ்க்கைச் சம்பவத்தைச் சொல்லும் இந்த நாட்டிய நிகழ்ச்சி தனிநடன நாடகம். கடவுள், சாத்தான், மனிதர்கள் - மூன்று பார்வைகள்; ஒரே நிஜம்.
சவிதா சாஸ்திரியின் கணவர் ஆ.க. ஸ்ரீகாந்த் எழுதிய கதைக்கு ராஜ்குமார் பாரதி இசையமைத்து கர்நாடக சங்கீதத்திற்கு ஒரு சர்வதேச இசையுணர்வு கொடுத்திருக்கிறார். விக்டர் பால்ராஜ் பின்னணி இசை அமைத்திருக்கிறார். சி.ஆ. ஜோய் மற்றும் அருண் திவாரி உடைகளை வடிவமைத்துள்ளனர். |
|
சந்தியா கல்யாணசுந்தரம், சான் ஹோசே, கலிஃபோர்னியா |
|
|
More
பார்வையற்றோருக்கு உதவ 'சூர்தாஸ்' நாட்டிய நாடகம் தமிழ்ப் பள்ளி மாணவர் சேர்க்கை ஹூஸ்டன்: உதவும் கரங்களுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி பன்னாட்டுப் புறநானூறு மாநாடு
|
|
|
|
|
|
|