செல்வி. நிவேதா ராம் ஆகாஷ் லக்ஷ்மணன்
|
|
|
|
|
ஜூலை 3 முதல் 7வரை தெற்கு சான் ஃபிரான்சிஸ்கோவின் பின்டாங் பேட்மின்டன் கிளப் வளாகத்தில் ஐக்கிய அமெரிக்க பேட்மின்டன் அசோசியேஷன் (USAB) தேசிய அளவில் நடத்திய போட்டிகளில் செல்வன். கார்த்திக் கல்யாணசுந்தரம் 13 வயதுக்குட்பட்டோர் பிரிவில் முதலிடம் பிடித்துச் சேம்பியன் பட்டம் வென்றார். இதில் இவர் இறுதிச் சுற்றில் அலெக்சாண்டர் ஜெங்கை 21-15, 19-21, 21-9 என்ற கணக்கில் வென்றார். இதைத் தவிர இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளிலும் தமது வயதுக்கான பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். பார்க்க
அத்தோடு நிற்கவில்லை கார்த்திக். ஜூலை மாதத்தின் பிற்பகுதியில் வட மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் முதல் நான்கு இடங்கள் பெற்ற வீரர்களிடையே நடந்த பான் அமெரிக்கன் போட்டியில் பங்கேற்று, தனது வயதுக்கான ஒற்றையர் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். இதில் பெரூ, பிரேசில், கனடா, ஜமைக்கா, மெக்சிகோ தவிர அமெரிக்க வீரர்கள் கலந்துகொண்டனர். இதில் இவர் அமெரிக்கரான க்ளேடன் கேயனை எதிர்கொண்டு 16-21, 24-22, 19-21 என்ற புள்ளிகளில் ரன்னர்-அப் ஆனது குறிப்பிடத் தக்கது. இந்தப் போட்டித் தொடர் மெக்சிகோவில் நடைபெற்றது. விவரங்களுக்கு
தென்றல் பதிப்பாளரும் தமிழ் ஆன்லைன் அறக்கட்டளை நிறுவனர்-உறுப்பினருமான திரு. சி.கே. வெங்கட்ராமன் அவர்களின் மகனாவார் செல்வன். கார்த்திக் கல்யாணசுந்தரம். அமெரிக்காவில் விரைந்து பரவிவரும் விளையாட்டான பேட்மின்டனில் குறித்து ஆர்வமுடையவர்கள் தங்கள் பகுதியில் எங்கே பேட்மின்டன் கிளப் உள்ளதெனப் பார்க்க: www.teamusa.org/USA-Badminton |
|
செய்திக்குறிப்பிலிருந்து |
|
|
More
செல்வி. நிவேதா ராம் ஆகாஷ் லக்ஷ்மணன்
|
|
|
|
|
|
|