சிகாகோ: வறியோர்க்கு உணவு டாலஸ்: 'ஜீவா'- நவீன நாட்டியம் டாலஸ்: கலை.செழியன் கவனகம் அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள்: ஆறாவது ஆண்டு விழா SOCAL: 'வாங்க பழகலாம்' சத்குருவின் 'உள் பொறியியல்' நியூ ஜெர்சி: அன்னையர் தினம் NETS: சித்திரை விழா சிகாகோவில் பொன்னியின் செல்வன் சான் டியகோ: தமிழ்ப் புத்தாண்டு விழா ஹன்ட்ஸ்வில்: தமிழ்ப் புத்தாண்டு கலைமகள் தமிழ்ப் பள்ளி ஆண்டுவிழா டாலஸ்: முத்தமிழ் விழா மெம்ஃபிஸ்: ஒய்.ஜி.மகேந்திரனுக்குப் பாராட்டு
|
|
|
|
|
மார்ச் 30, 2013 அன்று, ஹூஸ்டன் (டெக்சஸ்) அபிநயா நடனப் பள்ளி மாணவர்கள் 'ரசானுபாவா 2013' என்ற கலைநிகழ்ச்சியை கப்லான் தியேட்டர், யூத சமுதாய மையத்தில் அரங்கேற்றினர். நிகழ்ச்சி பரதநாட்டியம் மற்றும் குச்சிபுடி நடனங்களின் சங்கமமாக இருந்தது. நடனப் பள்ளி இயக்குனர் குரு இந்திராணி பார்த்தசாரதி பந்தநல்லூர் பாணி பரதத்திலும், குச்சிபுடியிலும் தேர்ந்தவர்.
நிகழ்ச்சி இளைய நடனக் கலைஞர்கள் நடனத்தோடு துவங்கியது. தொடர்ந்து நடுநிலை மாணவர்கள் அடவும் ஜதீஸ்வரமும் ஆடினார்கள். ஐந்து முதல் எட்டு வயதுக் குழந்தைகளுக்காக நாட்டுப்புற மற்றும் ஃப்யூஷன் நடனத்தை குரு இந்திராணி சிறப்பாக உருவாக்கி இருந்தார். மூத்த மாணவர்கள் 'துளசி மலர்மாலை' என்ற தலைப்பிலான கோதாதேவி கதையை மையமாகக் கொண்ட நாட்டிய நாடகத்தை வழங்கினர். நீரஜா கோதா தேவியாகவும், அவியா, ஸ்பூர்த்தி, ஸ்ரேயா, ஐஸ்வர்யா, சீதா, சமிதா, சாய் லக்ஷ்மி, ஸ்ருதி, பிரியங்கா, மாயா ஆகியோர் தோழியராகவும், அனுபமா குழந்தைக் கண்ணன் ஆகவும் நடித்தனர். ரித்விக் மற்றும் விஷ்ணுசித்தா ஆகியோரும் நிகழ்ச்சிக்கு மெருகேற்றினர். ஸ்ரீவத்சவா அழகாகப் பின்னணி பாடினார். தீப்தி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். பள்ளியின் இணையாசிரியரான அனுபமா நகசிம்ம நன்றியுரையுரை வழங்க, நிகழ்ச்சி நிறைவெய்தியது. |
|
தகவல்: விஜயலட்சுமி ராஜா படம்: அமிதாவா சர்க்கார் |
|
|
More