சிகாகோ: வறியோர்க்கு உணவு டாலஸ்: 'ஜீவா'- நவீன நாட்டியம் டாலஸ்: கலை.செழியன் கவனகம் அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள்: ஆறாவது ஆண்டு விழா SOCAL: 'வாங்க பழகலாம்' சத்குருவின் 'உள் பொறியியல்' நியூ ஜெர்சி: அன்னையர் தினம் NETS: சித்திரை விழா சிகாகோவில் பொன்னியின் செல்வன் சான் டியகோ: தமிழ்ப் புத்தாண்டு விழா ஹன்ட்ஸ்வில்: தமிழ்ப் புத்தாண்டு கலைமகள் தமிழ்ப் பள்ளி ஆண்டுவிழா ஹூஸ்டன்: 'ரசானுபவா' மெம்ஃபிஸ்: ஒய்.ஜி.மகேந்திரனுக்குப் பாராட்டு
|
|
டாலஸ்: முத்தமிழ் விழா |
|
- சின்னமணி|ஜூன் 2013| |
|
|
|
|
|
ஏப்ரல் 27, 2013 அன்று கோப்பல் மேற்கு நடுநிலைப்பள்ளி அரங்கத்தில் மெட்ரோப்லக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற முத்தமிழ் விழா தமிழ்த்தாய் வாழ்த்து, பாலதத்தா பள்ளி நாடகங்களுடன் ஆரம்பமானது. தொடர்ந்து பேரா. சாலமன் பாப்பையா அவர்கள் தலைமையில் 'அமெரிக்காவில் அதிகம் விட்டுக்கொடுப்பது ஆண்களா? பெண்களா?' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் 'தமிழ் இனி' திருமுடி, கலை நாயகம், ராஜாமணி, மெஸ்வின், ராம்கி, விஜி ராஜன் பங்கேற்றனர். அதிகம் விட்டுக்கொடுப்பது பெண்களே, அதே சமயத்தில் அதிகம் அனுசரித்துப் போவது ஆண்களே என்று நடுவர் தீர்ப்பு வழங்கினார்.
டாக்டர். பிரதிபா நடேசன் 'முத்தைத்தரு' என்று தொடங்கும் திருப்புகழுக்கு நவீன பரதநாட்டியத்தில் நடனம் அமைத்து ஆடினார். விஜய் டிவி புகழ் கோபிநாத் வழங்கிய 'வாங்க கலந்து பேசலாம்' நிகழ்ச்சியில் 'அமெரிக்காவில் குழந்தை வளர்ப்பில் அதிகம் சிரமப்படுவது பெற்றோர்களா? குழந்தைகளா?' என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. பெரியவர்களுக்கு இணையாக இளைஞர்களும் சளைக்காமல் கருத்துக்களை எடுத்துவைத்தனர். எப்போதும் ஃபோனில் மெசேஜ் அனுப்புவதை குறைகூறிய பெற்றோர்களுக்கு, ராமு என்ற இளைஞர், அது எப்படித் தங்கள் வாழ்க்கையோடு ஒன்றிணைந்த விஷயம் என்று எடுத்துரைத்தபோது அரங்கமே ஒரு நிமிடம் உறைந்துவிட்டது. வேகமாக மாறிவரும் இந்தக் காலத்தில், பெற்றோர்கள் பிள்ளைகள் மீது நம்பிக்கை வைத்து, தங்கள் அச்சங்களை எடுத்துக்கூறி, குழந்தைகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை கோபிநாத் வலியுறுத்தினார்.
மாலையில் கவிஞர். அறிவுமதியின் கவியரங்கம் நடைபெற்றது. சங்க இலக்கியத்தில் இருந்து பல்வேறு தமிழர் பெருமைகளை எடுத்துக் கூறினார். தமிழர் பாரம்பரியத்தைக் குழந்தைகளுக்கு எடுத்துக் கூற வலியுறுத்தினார். கோலம் போடுவது முதல், முருங்கைக்காய் பங்கீடு செய்வதுவரை தமிழர்கள் எல்லா உயிர்களையும் சமமாகப் பாவித்தனர் என்றுரைத்தார். பெண்சிசுக் கொலை குறித்த கவிதை கண்களில் நீரை வரவழைத்தது. இறுதியாக, கங்கை அமரன் பங்கேற்பில் பிரபு– கோபிநாத் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. கங்கை அமரன் பல்வேறு பாடலகளைப் பாடியதோடு அவை உருவானது குறித்த சுவையான தகவல்களைப் பரிமாறினார். நிகழ்ச்சிகளை பால்பாண்டியன், விஜி ராஜன், கலை நாயகம், சுமதி மோகன், கோமதி நாயகம், சுப்ரமணியன், ஜலீலா, தங்கவேல், ரகு மற்றும் பிற தொண்டர்கள் நன்கு ஏற்பாடு செய்திருந்தனர். |
|
சின்னமணி, டாலஸ் |
|
|
More
சிகாகோ: வறியோர்க்கு உணவு டாலஸ்: 'ஜீவா'- நவீன நாட்டியம் டாலஸ்: கலை.செழியன் கவனகம் அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள்: ஆறாவது ஆண்டு விழா SOCAL: 'வாங்க பழகலாம்' சத்குருவின் 'உள் பொறியியல்' நியூ ஜெர்சி: அன்னையர் தினம் NETS: சித்திரை விழா சிகாகோவில் பொன்னியின் செல்வன் சான் டியகோ: தமிழ்ப் புத்தாண்டு விழா ஹன்ட்ஸ்வில்: தமிழ்ப் புத்தாண்டு கலைமகள் தமிழ்ப் பள்ளி ஆண்டுவிழா ஹூஸ்டன்: 'ரசானுபவா' மெம்ஃபிஸ்: ஒய்.ஜி.மகேந்திரனுக்குப் பாராட்டு
|
|
|
|
|
|
|