சிகாகோ: வறியோர்க்கு உணவு டாலஸ்: 'ஜீவா'- நவீன நாட்டியம் டாலஸ்: கலை.செழியன் கவனகம் அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள்: ஆறாவது ஆண்டு விழா SOCAL: 'வாங்க பழகலாம்' நியூ ஜெர்சி: அன்னையர் தினம் NETS: சித்திரை விழா சிகாகோவில் பொன்னியின் செல்வன் சான் டியகோ: தமிழ்ப் புத்தாண்டு விழா ஹன்ட்ஸ்வில்: தமிழ்ப் புத்தாண்டு கலைமகள் தமிழ்ப் பள்ளி ஆண்டுவிழா டாலஸ்: முத்தமிழ் விழா ஹூஸ்டன்: 'ரசானுபவா' மெம்ஃபிஸ்: ஒய்.ஜி.மகேந்திரனுக்குப் பாராட்டு
|
|
சத்குருவின் 'உள் பொறியியல்' |
|
- |ஜூன் 2013| |
|
|
|
|
|
அக்டோபர் 11-13, 2013 தேதிகளில் கலிஃபோர்னியாவின் சான் மேடியோவில் சத்குரு ஸ்ரீ ஜக்கி வாசுதேவ் அவர்கள் மூன்று நாள் 'உள் பொறியியல்' நடத்துவார். மேலும் அறியஅல்லது வீடியோக்கள் பார்க்க www.InnerEngineering.org பார்வையிடுங்கள்.
மே11, 2013 கலிஃபோர்னியாவின் பாலோ ஆல்டோவில் எச்.பி. அரங்கத்தில் 'சத்குருவுடன் உரையாடல்' நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களுடன் சிலிகான் பள்ளத்தாக்கு தொழிலதிபர் பி.வி. ஜகதீஷ் உரையாடினார். நிகழ்ச்சியை TIE, SIPA ஆகிய நிறுவனங்கள் முன்னின்று ஏற்பாடு செய்திருந்தனர். இந்த உரையாடலில் ஒரு கேள்விக்கு விடையளிக்கையில் சத்குரு, "என்னுடைய நோக்கம் சாதாரண மனிதர்களை அசாதாரமாணவர்களாக ஆக்குவதல்ல அவர்களை சாதாரண நிலையில் இருந்து மிகச் சாதாரண நிலைக்குக் கொண்டு செல்வதே. ஏனென்றால் உன்னைவிட நான் அசாதாரமாணவன் என்ற எண்ணம் மிகப்பெரிய நோய். அது மனிதனை அதலபாதாளத்தில் தள்ளிவிடும். இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களின்மீது அன்பு மற்றும் நேயம் உருவாக்கிவிட்டால் சேவை மனப்பான்மை தானாக வரும். அனைத்துயிர்களின் மேலுமுள்ள அன்புதான் மிகச்சிறந்த மனிதர்களையும் தலைவர்களையும் உருவாக்குகிறது" என்று குறிப்பிட்டார்.
ஞானியும் சிந்தனையாளருமான சத்குரு அவர்கள் மதம் தாண்டிய பிற தலைப்புகளில் பல்துறைப் பிரபலங்களுடன் உரையாடிவற்றை 'மிஸ்டிக் உரையாடல்கள்' inconversations.com என்ற வலையகத்தில் காண முடியும். திரைப்பட இயக்குனர் சேகர் கபூர், பந்தய கார் சாம்பியன் கிறிஸ் ரேடோ ஆகியோர் இதில் அடங்குவர்.
மே 12ம் தேதியன்று அமெரிக்க மேற்குக் கடற்கரைப் பகுதியில் ஈஷா யோக மையம் அமைக்கும் பணியின் முதல் படியாக சான் ஹோசேயிலிருந்து 50 மைல் தூரத்தில் உள்ள ஓரிடத்தில் 1008 ஆலிவ் மரக் கன்றுகள் சத்குருவின் முன்னிலையில் நடப்பட்டன. |
|
செய்திக்குறிப்பிலிருந்து |
|
|
More