தெரியுமா?: கனடாவில் வன்னி வீதி தெரியுமா?: ஹீலர் பாஸ்கர் அமெரிக்கா வருகை முழங்குதிரை! பாலவிகாஸ்: ஆதரவற்ற இலங்கைக் குழந்தைகளுக்கு நிதி 77வது திருமண நாளன்று!
|
|
எட்டாவது ஆண்டு நிறைந்த இட்ஸ் டிஃப் வானொலி சேவை |
|
- |ஜூன் 2013||(1 Comment) |
|
|
|
|
|
சான் ஃபிரான்ஸிஸ்கோ பகுதியின் புகழ்பெற்ற ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகம் நடத்திவரும் சமூக வானொலியைப் பல உலக மொழிகளிலும் KZSU 90.1 என்னும் பண்பலை வரிசையில் நடத்தி வருகிறது. ஒவ்வொரு புதன்கிழமையும் காலை 6 மணி முதல் 9 மணிவரை இட்ஸ் டிஃப் என்னும் இந்திய மொழி, பெரும்பாலும் தமிழ் நிகழ்ச்சிகளை, எட்டு ஆண்டுகளாகத் தயாரித்து வழங்கி வருகிறார் ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன். மே 5, 2013 அன்று ஃப்ரீமாண்ட் மிஷன் சான் ஹோசே பள்ளி அரங்கத்தில் இட்ஸ் டிஃப் (www.itsdiff.com) பண்பலை வானொலிச் சேவையின் எட்டாவது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. இதுவரை ஒலிபரப்பில் பங்கேற்ற தயாரிப்பாளர்களும் நேயர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இது கலிஃபோர்னியா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு 501(3) சி வரிவிலக்குப் பெற்ற அமைப்பாகும்.
வேணு சுப்ரமணியன் தொகுத்து வழங்கிய 'எது சரியான வார்த்தை'; நிபுணர் ஆனி ஃபாக்ஸ் வழங்கிய குழந்தை வளர்ப்பு குறித்த உரை; சுயமுன்னேற்ற நூல் எழுத்தாளரும் பேச்சாளருமான ராஜேஷ் ஷெட்டி வழங்கிய முன்னேற்றத்துக்கான எட்டு வழிகள் குறித்த உரை; சுபா தொகுத்து வழங்கிய வேலையிலும் வீட்டிலும் பெண்களின் பணிப்பளுவை சமாளிப்பது குறித்த, பெண்கள் கலந்து கொண்ட கலந்துரையாடல்; சரவணன் வழங்கிய இணையத்தில் பாதுகாப்பு குறித்த உரை ஆகியவை நிகழ்ச்சியில் இடம்பெற்றன. இவை தவிர ஏராளமான இளம் பேச்சாளர்கள் தலைமைப் பண்பு குறித்து உரையாற்றினார்கள். கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறின. நிகழ்ச்சியை மீரா ஸ்ரீநிவாசன் தொகுத்து வழங்கினார். இட்ஸ் டிஃப் தயாரிப்பாளர் ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன் நன்றி தெரிவித்தார்.
இட்ஸ் டிஃப் வானொலி நிகழ்ச்சியில் காலை 6 முதல் 6.30 மணிவரை பக்திப் பாடல்கள், கர்நாடக இசை; 6.30 முதல் 7.30 வரை பல்வேறு துறைசார்ந்த வல்லுனர்களின் பேட்டிகள்; 7.30 முதல் 8.30 வரை அந்த வாரத்திற்கான சிறப்பு நிகழ்ச்சி ஆகியவை ஒலிபரப்பாகின்றன. சிறப்பு நிகழ்ச்சியில் சான்ஃபிரான்ஸிஸ்கோ பகுதிக்கு இந்தியாவிலிருந்து வருகைதரும் பிரபலங்களுடன் நேர்காணல் அல்லது அந்த வாரத்தில் நடைபெறும் பண்டிகைகள் குறித்தான நிகழ்ச்சிகள், திரையிசைப் பாடல் தொகுப்பு, நாட்டு நடப்பு, அரசியல் விமர்சனம் போன்றவை இடம்பெறுகின்றன. இறுதி அரை மணி நேரத்தில் நேயர் விருப்பப் பாடல்களை ஒலிபரப்புவது, அவர்களோடு உரையாடல் நடைபெறும். |
|
தவிர, இட்ஸ் டிஃப் இப்பகுதியின் தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து ஏராளமான சமூக சேவைகளிலும் ஈடுபடுகிறது. ஒன்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இட்ஸ் டிஃபுக்கு தென்றலின் வாழ்த்துக்கள். |
|
|
More
தெரியுமா?: கனடாவில் வன்னி வீதி தெரியுமா?: ஹீலர் பாஸ்கர் அமெரிக்கா வருகை முழங்குதிரை! பாலவிகாஸ்: ஆதரவற்ற இலங்கைக் குழந்தைகளுக்கு நிதி 77வது திருமண நாளன்று!
|
|
|
|
|
|
|