தெரியுமா?: கனடாவில் வன்னி வீதி முழங்குதிரை! பாலவிகாஸ்: ஆதரவற்ற இலங்கைக் குழந்தைகளுக்கு நிதி எட்டாவது ஆண்டு நிறைந்த இட்ஸ் டிஃப் வானொலி சேவை 77வது திருமண நாளன்று!
|
|
|
|
|
நோயின்றி வாழ்வது எப்படி என்ற தேடலில் நீங்கள் ஈடுபட்டால் ஹீலர் பாஸ்கரைப் பற்றிக் கேள்விப்படாமல் இருக்க முடியாது. நோயாளியாகத் தன் இளமையைக் கழித்து, அதன்பின் ஒரு பொறியாளராக, நோயின் கொடுமையிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள மேற்கொண்ட ஆய்வுகள் அவரைப் பல ஆன்மீக, வாழ்வியல் வழிகாட்டிகளிடமும் நூல்களிடமும் அழைத்துச் சென்றன. நோயில்லாமல் வாழும் முறைகளையும், வந்துள்ள நோயின் கடுமையை குறைக்கவும், போக்கவுமான முறைகளையும் அறிவியல் பார்வையுடன், நம் முன்னோர்களின் வாழ்வியல் பழக்கவழக்கங்களுடன் ஒப்பிட்டு, பாமரர்க்கும் புரியும் விதத்தில் ‘செவிவழி தொடு சிகிச்சை’ என்ற முறையை உருவாக்கி மக்களிடையே அந்த அறிவைப் பரப்பி வருகிறார். இதை தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளில் வழங்கி வருவது இவரைத் தமிழ் நாட்டிற்கு அப்பாலும் கொண்டுசென்றுள்ளது .
செவிவழி தொடு சிகிச்சையைப் பற்றிச் சுருக்கமாக சொல்லவேண்டுமெனில் "நாம் அனைவரின் உடலிலும் ஒரு சுரப்பி இருக்கிறது. அது சுரக்கும் ஒரு திரவம் மனிதனின் அனைத்து நோய்களையும் குணப்படுத்தும். இந்த திரவம் 120 வயதுவரை சுரக்கும். அந்த சுரப்பியின் பெயர் என்ன? உடலில் எங்கே உள்ளது? அது சுரக்கும் திரவத்தின் பெயர் என்ன? அதை எப்படி நமக்கு நாமே சுலபமாக சுரக்க வைப்பது என்பதைப் படித்தவர்கள், படிக்காதவர்கள் அனைவருக்கும் தெரியும்படிப் பல மொழிகளில் விளக்கமாக நான்கு மணி நேரத்தில் புரிய வைத்து கற்றுகொடுக்கிறார் ஹீலர் பாஸ்கர்."
இவரை வட அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் பேரவை கனடாவில் ஜூலை 5 முதல் 7 வரை டொரான்டோவில் நடைபெறவிருக்கும் பேரவை விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக அழைத்து வருகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி அமெரிக்காவில் வாஷிங்டன் DC, விரிகுடாப் பகுதி, சியாடல், டெட்ராயிட், நியூ யார்க், நியூ ஜெர்ஸி, ஃபிலடெல்ஃபியா, டாலஸ் டொரான்டோ போன்ற இடங்களில் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. ஜூலை இறுதிவரை இவை நடக்கும். |
|
பயற்சிக்கு முன்பதிவு செய்ய www.ValaiTamil.Com/Events நிகழ்ச்சி விவரங்களை அறிய: anatomictherapy.org நிகழ்ச்சியை உங்கள் பகுதியில் நடத்த விரும்பினால், தொடர்புகொள்ள: partha@ValaiTamil.Com
ச. பார்த்தசாரதி, வர்ஜினியா |
|
|
More
தெரியுமா?: கனடாவில் வன்னி வீதி முழங்குதிரை! பாலவிகாஸ்: ஆதரவற்ற இலங்கைக் குழந்தைகளுக்கு நிதி எட்டாவது ஆண்டு நிறைந்த இட்ஸ் டிஃப் வானொலி சேவை 77வது திருமண நாளன்று!
|
|
|
|
|
|
|