மானஸா சுரேஷ்: ஃபுல்பிரைட் ஸ்காலர் வினித்ரா சுவாமி
|
|
|
|
|
சங்கீதா அண்ணாமலை கலிஃபோர்னியாவின் சாரடோகாவில் வசிக்கிறார். பெர்க்கலி பல்கலையிலிருந்து மூலக்கூறு மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் பட்டம் பெறவிருக்கிறார். கே (Kay) மற்றும் தமிழரசி அண்ணாமலையின் மகளான இவர் இன்னும் மூன்று மாதங்களில் ஃபுல்பிரைட் ஸ்காலர்ஷிப்பில் தென்கொரியாவுக்குப் பறக்க உள்ளார். அங்கே ஊரகங்களில் அஞ்சல்வழி மணமகள் (Mail-order brides) முறை காரணமாக ஏற்பட்ட விளைவுகள் மற்றும் மருத்துவ வசதிகள் குறித்து ஆய்வு செய்வார். அஞ்சல்வழி மணமகள்கள் தொகை பெருகிவரும் அதே நேரத்தில் அவர்கள் விளிம்புநிலைக்குத் தள்ளப்படுவதும் அதிகரித்து வருகிறது. சியோல் தேசியப் பல்கலைக் கழகத்தின் பொதுமக்கள் உடல்நலப் பள்ளி டீன் சூன்மன் க்வான் இவரது ஆய்வுக்கு வழிகாட்டியாக இருப்பார்.
சங்கீதாவுக்குக் கொரியாமீது காதல், கூப்பர்டினோவின் மோன்ட விஸ்டா உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போதே ஏற்பட்டுவிட்டது. கல்லூரிக் காலத்தில் கொரியாவின் கலாசாரம், சமூகப் பிரச்சனைகள் குறித்து நிறைய அறிந்து கொண்டார். கொரிய மொழியையும் படித்தார். அதே சமயம் தனது மருத்துவ ஆர்வத்தையும் பல்வேறு சிறந்த ஆய்வகங்களில் அனுபவத்தின் மூலம் வளர்த்துக்கொண்டார். லாபநோக்கற்ற தன்னார்வ நிறுவனமான Peer Health Exchange அமைப்பில் ஆசிரியராகச் சேவை செய்தார். Berkeley Leadership Council அமைப்பின் உறுப்பினர். புதிய மாணவர்களோ, முக்கியஸ்தர்களோ பெர்க்கலிக்கு வந்தால் அவர்களைப் பெருமிதத்தோடு சுற்றிக் காண்பிக்கும் Campus Ambassador ஆகவும் இருக்கிறார். |
|
ஃபுல்பிரைட் ஆய்வுநிதிக் காலத்தின் முடிவில் அவர் அமெரிக்கா திரும்பி வந்து மகப்பேறு மருத்துவராகும் பொருட்டு மருத்துவக் கல்லூரியில் படிக்கத் திட்டமிட்டுள்ளார்.
தீபா கண்ணப்பன் |
|
|
More
மானஸா சுரேஷ்: ஃபுல்பிரைட் ஸ்காலர் வினித்ரா சுவாமி
|
|
|
|
|
|
|