போட்டிகள்: சப்தமி அறக்கட்டளை அபிராமி கலை மன்றம்: விமலாவின் ஒளி விழா NETS குழந்தைகள் தின விழா நாட்யா: 'Beats of life, Rhythms of heritage'
|
|
|
|
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் 'GATS சூப்பர் சிங்கர் 2012' போட்டிகளை, ஜூனியர், சீனியர் பிரிவுகளில் நடத்தி வருகிறது. பைனி குரோவ் நடுநிலைப் பள்ளி அரங்கத்தில் செப்டம்பர் 9, 2012 அன்று போட்டிக்கான குரல் தேர்வு நடைபெற்றது. இதில் சுமார் ஐம்பது பேர் முதலாவது சுற்றுக்குத் தகுதி பெற்றனர். செப்டம்பர் 16 அன்று முதல் சுற்றாக 'துள்ளல் இசைப் பாடல்' நடந்தது. அடுத்து செப்டம்பர் 23 அன்று 'மெலடி பாடல்' சுற்று நடைபெற்றது.
மூன்றாம் சுற்று (வெஸ்டர்ன் பாடல்கள்) அக்டோபர் 7 அன்று நடைபெற்றது. அதில் தேர்வு பெற்றவர்கள், அக்டோபர் 21ம் நாள் காலிறுதிச் சுற்றில் பங்குகொள்வர். அரையிறுதிச் சுற்று, அக்டோபர் 28 அன்று நடைபெறும். நவம்பர் 10 அன்று கேட்ஸின் தீபாவளிக் கொண்டாட்டம் சென்னையில் இருந்து வரவிருக்கும் திரையிசைக் கலைஞர்களின் கச்சேரியுடன் மலர இருக்கிறது. அதே நாளில் சூப்பர் சிங்கர் 2012ன் இறுதிச் சுற்றும் நடைபெற்றுப் பரிசுகள் வழங்கப்படும்.
நிகழ்ச்சிகளை ஓம், ஜெயஸ்ரீ இருவரும் நேர்த்தியாகத் தொகுத்து வழங்குகின்றனர். மணவாளன், கார்த்திக் ஆகியோர் அரங்க ஒலியமைப்பு, மதிப்பெண்களைத் தொகுத்தல் போன்ற பணிகளில் உதவுகின்றனர். 'வெங்கட் போட்டோகிராஃபி' புகைப்படம் எடுக்கின்றனர். |
|
சதீஷ் பாலசுப்பிரமணியன், அட்லாண்டா, ஜார்ஜியா |
|
|
More
போட்டிகள்: சப்தமி அறக்கட்டளை அபிராமி கலை மன்றம்: விமலாவின் ஒளி விழா NETS குழந்தைகள் தின விழா நாட்யா: 'Beats of life, Rhythms of heritage'
|
|
|
|
|
|
|