இட்லி வகைகள்
|
|
|
|
|
தேவையான பொருட்கள் பயற்றம் பருப்பு - 1 கிண்ணம் உளுத்தம் பருப்பு - 1/2 கிண்ணம் புழுங்கலரிசி - 2 மேசைக்கரண்டி அவல் - 2 மேசைக்கரண்டி பெருங்காயம் - சிறிதளவு கறிவேப்பிலை - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப நெய் - 1 தேக்கரண்டி
செய்முறை பருப்புகள், அரிசி, அவல் எல்லாவற்றையும் மூன்று மணி நேரமாவது ஊறவைக்கவும். களைந்து நைசாக அரைக்கவும். அதிகம் தண்ணீர் விடாமல், ரொம்பக் கெட்டியாகவும் இல்லாமல் நன்கு தளர அரைத்து உப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு எட்டுமணி நேரம் வைக்கவும். பிறகு மேலாக நெய் ஊற்றிக் கலந்து இட்லி வார்க்கவும். இது மிகவும் சுவையான இட்லியாகும். தேவைப்பட்டால் முந்திரிப் பருப்பு வறுத்துப் போட்டும் செய்யலாம். இதற்கும் பச்சை மிளகாய் புளிப்பச்சடி, தேங்காய்ச் சட்னி ஏற்றதாக இருக்கும். |
|
தங்கம் ராமசாமி, ப்ரிட்ஜ்வாட்டர், நியூ ஜெர்ஸி |
|
|
More
இட்லி வகைகள்
|
|
|
|
|
|
|