Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | அஞ்சலி | நலம் வாழ | சினிமா சினிமா
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | வாசகர் கடிதம் | பொது | நூல் அறிமுகம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
லாஸ்யா டான்ஸ் அகாடமி இருபதாம் ஆண்டு விழா
BATM நிகழ்ச்சிகள்
பார்வையற்றோருக்கு உதவ 'சரணாகதி'
CIF 'சாரல்' இசை இரவு
- |ஆகஸ்டு 2012|
Share:
செப்டம்பர் 22, 2012 அன்று மாலை ஐந்தரை மணிக்கு, சென்னை அடையாறு புற்றுநோய் இன்ஸ்டிடூட்டுக்கு உதவும் அமெரிக்க அறக்கட்டளையுடன் (Cancer Institute Foundation-CIF)

வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் இணைந்து 'சாரல்' என்ற இசை, நடனம் மற்றும் பலகுரல் நகைச்சுவை நிகழ்ச்சியை ஹேவர்டில் உள்ள சபோ கல்லூரி (Chabot College) கலை அரங்கத்தில்

நடத்துகின்றது. இதை வளர்ந்து வரும் தமிழ் சினிமா நட்சத்திரமான, 'அது, இது, எது' புகழ் சிவ கார்த்திகேயன் தொகுத்து வழங்குவார். நிகழ்ச்சியின் மூலம் திரட்டப்படும் நிதி புற்றுநோய்க்கு

இலவசமாக சிகிச்சை பெறும் ஏழைகளின் மருத்துவச் செலவுக்கென வழங்கப்படும்.

நிகழ்ச்சியில் சமீபத்தில் வந்த பிரபல திரைப்பட பாடல்களை வீடேஸ் (VDAZE) இசைக்குழு வழங்க உள்ளது. சில முக்கியப் பாடல்களுக்கு காம்பி துபே (Kambi Dubey) நடனக்குழு மேடையில் ஆடிக்

குதுகலப்படுத்தும். தொகுப்புரையாளர் சிவ கார்த்திகேயன் தனக்கே உரிய பாணியில் சினிமா, அரசியல் பிரபலங்கள் போலப் பல குரலில் பேசி மகிழ்விக்கப் போகின்றார். இறுதியில், இசைக்குழு வழங்கும்

பிரபல குத்துப்பாடல்களுக்கு நீங்களும் ஆடி மகிழலாம். அதே நேரத்தில் நீங்கள் தரும் நுழைவுக் கட்டணம் ஒரு நற்செயலுக்குப் பயன்படப் போகிறது.

அடையாறு புற்றுநோய் நிறுவனத்தில் வருடத்திற்கு 125,000 நோயாளிகள் இந்தியா முழுவதிலும் இருந்து சிகிச்சை பெறுகின்றனர். நோயாளிகளுக்கான 423 படுக்கைகளில் 297 இலவச சிகிச்சை

பெறுபவர்களுக்காக ஒதுக்கப்படுகின்றது. இதற்கு அரசின் நிதியுதவி கிடையாது. நம்போன்ற சேவை நிறுவனங்களின் உதவியால்தான் இது சாத்தியமாகிறது.

நிகழ்ச்சியின் நுழைவுக் கட்டணம் நபர் ஒன்றுக்கு $25, $20, $15 மட்டுமே.
சிவ கார்த்திகேயனுடன் காலைச் சிற்றுண்டி
செப்டம்பர் 23, 2012 ஞாயிறன்று காலை ஒன்பது மணிக்கு சிவ கார்த்திகேயன் அவர்களுடன் மில்பிடாஸில் உள்ள திருப்பதி பீமாஸ் உணவகத்தில் சிற்றுண்டி அருந்தி மகிழலாம். அவர் இதில் பங்கேற்கும்

ஒவ்வொருடனும் நேருக்கு நேர் சில நிமிடங்கள் உரையாடுவார். அவருடன் புகைப்படமும் எடுத்துக் கொள்ளலாம். இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கென்றே கலிஃபோர்னியாவுக்கு வருகை தரும்

சிவகார்த்திகேயன், இதை ஒரு சேவைப் பணியாகவே செய்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

காலைச் சிற்றுண்டி நிகழ்ச்சியில் பங்குபெறக் கட்டணம் ஒரு நபருக்கு $30 மட்டுமே.

தொடர்பு கொள்க:
கண்ணன் வைரவன்: kannanus@cifwia.org; 408-375-9401
பிரபு வெங்கடேஷ் சுப்பிரமணியன்: president@bayareatamilmanram.org; 925-202-1176

செய்திக்குறிப்பிலிருந்து
More

லாஸ்யா டான்ஸ் அகாடமி இருபதாம் ஆண்டு விழா
BATM நிகழ்ச்சிகள்
பார்வையற்றோருக்கு உதவ 'சரணாகதி'
Share: 




© Copyright 2020 Tamilonline