நியூ ஜெர்சி: தமிழ் மெல்லிசை ராகமாலிகா: இசை நிகழ்ச்சி ஈஷா உத்சவம் சின்மயா மிஷன்: நாட்டிய நிகழ்ச்சி புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு 2012. NJTS: இரண்டு சொற்பொழிவுகள் மாசசூசெட்ஸ்: வைகாசி விசாகம் சான் ஹோசே: பாலாஜி கோவில் கும்பாபிஷேகம் BATM: 'சாக்லேட் கிருஷ்ணா' மேகலா நீலகண்டன்: இசை அரங்கேற்றம் 'பரதம்': நாட்டிய நிகழ்ச்சி கனெக்டிகட் தமிழ்ச் சங்கம்: சித்திரைத் திருவிழா!!
|
|
|
|
|
2012 மே, ஜூன் மாதங்களில், அம்மா ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி அவர்கள் சியாடல், சான் ஃபிரான்சிஸ்கோ- வளைகுடாப் பகுதி, லாஸ் ஏஞ்சலஸ், ஆல்பகர்க்கி, டாலஸ் ஆகிய இடங்களுக்கு வருகை தந்திருந்தார். தம்மைக் காணவந்த ஒவ்வொருவரையும் பரிவோடு அரவணைத்து, தமது அளவற்ற அன்பை வழங்கினார். தினமும் ஆன்மீக சொற்பொழிவு, தியானம், பஜனைகள் மற்றும் அம்மாவின் தரிசனம் நடைபெற்றன. ஆன்மீக முகாமில் தியான வகுப்புகள், தன்னலமற்ற சேவை, பஜனை, அம்மாவோடு கேள்வி-பதில், அம்மாவின் உணவு பரிமாற்றம், ஒருங்கிணை அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியவை நடைபெற்றன.
அம்மாவின் அமுத மொழி: "மிகச்சிறந்த பக்திக்கு இலக்கணமாகத் திகழ்பவன் பிரஹலாதன். பிரஹலாதனைப் போல் சிறந்த சமர்ப்பணம் உள்ள வேறொரு பக்தனைக் காண முடியாது. நமது பக்தி, 'பார்ட் டைம்' பக்தியாகும். ஏதாவது தேவை ஏற்பட்டால் நாம் இறைவனை நினைப்போம். தேவைகள் தீர்ந்துவிட்டால் இறைவனை நினைத்துப் பார்ப்பதே இல்லை. நாம் விரும்பியது நடக்காமல் போய்விட்டாலோ நம்பிக்கையை இழந்து விடுவோம். இதுவே நமது நிலை. ஆனால், எத்தனையோ இடையூறுகள் வந்தபோதும் பிரஹலாதன் மனம் தடுமாறவில்லை. ஒவ்வொரு இடையூறு வந்தபோதும் அவனது நம்பிக்கை அதிகரிக்கவே செய்தது. இடையூறு அதிகரிக்க அதிகரிக்க அவன் இறைவனின் பாதங்களை உறுதியாகப் பற்றிக் கொண்டான். அவனது சமர்ப்பணம் அவ்வளவு உறுதியாக இருந்தது. அதன் பலனாக உலகிற்கே ஒளி வழங்கும் தீபமாக அவன் மாறினான். பிரஹலாதனின் வாழ்வும், பக்தி பாவமும் இன்றும் ஆயிரக்கணக்கானோரின் இதயங்களுக்கு ஒளி வழங்குகின்றன." |
|
ஜூலை மாதத்தில் அம்மா வருகை தர இருக்கும் ஊர்களும், தேதிகளும்: சிகாகோ 06.30 - 07.04 வாஷிங்டன் டி.சி. 07.06 - 07.07 நியூ யார்க் 07.09 - 07.11 பாஸ்டன் 07.14 - 07.17 டொரன்டோ (கனடா) 07.19 - 07.22
அம்மாவின் பொதுநலத் தொண்டுகள் பற்றி அறிய: amritapuri.org/activity
மேலும் விபரங்களுக்கு: www.amma.org
சூப்பர் சுதாகர் |
|
|
More