சிகாகோ: வறியவர்க்கு உணவு NETS: சித்திரை விழா தான்யா இசைப்பள்ளி ஆண்டு விழா டெட்ராயிட்: ஸ்ரீனிவாச திருக்கல்யாண உற்சவம் கென்டக்கி தமிழ்ச் சங்கம்: 'வெங்கடா3' நாடகம் சித்திரை கலாட்டா 2012 அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள்: 5வது ஆண்டு நாள் அட்லாண்டா: தமிழ்ப்பள்ளி ஆண்டுவிழா அட்லாண்டா: 'சாக்லேட் கிருஷ்ணா' பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி ஆராதனை விழா சத்குரு வழங்கிய 'இன்னர் எஞ்சினியரிங்' யோகப் பயிற்சி சியாமா சாஸ்திரிகள் நினைவாஞ்சலி BTS: தமிழ்ப் புத்தாண்டு விழா கருணைக் கச்சேரிகள் பேரா. நோபொரு கரஷிமாவுக்கு விருது
|
|
|
|
|
மார்ச் 31, 2012 அன்று, சன்ஹிதி (Sanhiti) நடனக் குழுவும் வளைகுடாப் பகுதி தமிழ் மன்றமும் சேர்ந்து 'அறம் செய்' நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்காக 'Perceptions 2012' என்ற வித்தியாசமான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன. இது, பரதம், ஹிப்ஹாப், ஆஃப்ரோ, குத்து என்று பலவகை நடனங்களின் கற்பனைமிக்க கலவையாக இருந்தது. பிரியா ராமமூர்த்தி அவர்களின் வரவேற்புடன் நிகழ்ச்சி துவங்கியது. தமிழ் மன்றத் தலைவர் பாபு வெங்கடேஷ் சுப்ரமணியன், மே 27 அன்று நடக்க இருக்கும் க்ரேஸி மோகனின் 'சாக்லேட் கிருஷ்ணா' நாடகம் பற்றிப் பேசினார். நிதி உதவி அளித்த வணிக நிறுவனங்களின் மேலாளர்களை மேடைக்கு அழைத்து 'அறம் செய்' நிறுவனத்தினர் கௌரவித்தனர். சன்ஹிதி நிறுவனர்கள் பிரியா மற்றும் ரூபாவும் கௌரவிக்கப்பட்டனர். பின்னர் ரூபா நன்றி தெரிவிக்கையில், BATM உடன் மேலும் பல நிகழ்ச்சிகள் செய்ய எதிர்நோக்கி இருப்பதாகக் கூறினார்.
நிகழ்ச்சியின் மூலம் 25000 டாலர் நிதி திரட்டப்பட்டது. BATM சார்பில் நிதி உதவிக் காசோலைகளை தலைவர் பிரபு, செயலாளர் அன்பு ராஜன், பொருளாளர் முத்துக்குமார் ஆகியோர் ரூபா சுரேஷ், நவீன் நாதன் முன்னிலையில் கொடுத்தனர். |
|
மேலும் விவரங்களுக்கும் நிகழ்ச்சி பற்றி அறியவும்: www.bayareatamilmandram.org
பி.வி.சு., கலிஃபோர்னியா |
|
|
More