சிகாகோ: வறியவர்க்கு உணவு NETS: சித்திரை விழா தான்யா இசைப்பள்ளி ஆண்டு விழா டெட்ராயிட்: ஸ்ரீனிவாச திருக்கல்யாண உற்சவம் கென்டக்கி தமிழ்ச் சங்கம்: 'வெங்கடா3' நாடகம் சித்திரை கலாட்டா 2012 அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள்: 5வது ஆண்டு நாள் அட்லாண்டா: தமிழ்ப்பள்ளி ஆண்டுவிழா அட்லாண்டா: 'சாக்லேட் கிருஷ்ணா' பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி ஆராதனை விழா சத்குரு வழங்கிய 'இன்னர் எஞ்சினியரிங்' யோகப் பயிற்சி BTS: தமிழ்ப் புத்தாண்டு விழா கருணைக் கச்சேரிகள் Perceptions 2012 பேரா. நோபொரு கரஷிமாவுக்கு விருது
|
|
|
|
|
ஏப்ரல் 28, 2012 அன்று சிமிவேல்லி கல்சுரல் ஆர்ட்ஸ் சென்டரில் ஸ்நேகா, ஸ்ரீ சியாமா சாஸ்திரிகளின் கீர்த்தனைகளை அழகாகப் பாடினார். 'மரிவோதி' என்கிற ஆனந்தபைரவி கீர்த்தனையுடன் நிகழ்ச்சி துவங்கியது. அடுத்து சாவேரி ராகத்தில் 'சங்கரி சங்குரு சந்த்ரமுகி', கல்யாணியில் 'பிராவளாலச்சி', சிந்தாமணியில் 'தேவி ரோவ' ஆகிய கீர்த்தனைகளைப் பாடினார். பத்து நிமிடம் தோடியில் ஆலாபனை செய்து 'நின்னே நம்மினானு' என்கிற கீர்த்தனையில், நிரவல், ஸ்வரம் பாடி, மிருதங்க வித்வான் டாக்டர் சுதாகருக்கு தனி ஆவர்த்தனம் கொடுத்தார். லலிதா ராக 'தன்னு ப்ரோவு லலிதா', பைரவியில் 'சரி எவரம்மா', மத்யமாவதியில் 'பாலிஞ்சு காமாட்சி' பாடி முடித்தார். கிருஷ்ணன் குட்டியின் வயலினும் சுதாகரின் மிருதங்கமும் சிறப்பாக இருந்தன.
U.S.C.யில் மாணவியாகச் சேர இருக்கும் ஸ்நேகாவின் குரு கல்யாணி சதானந்தம், அரியக்குடி ராமானுஜ ஐயங்காரின் இசைப்பள்ளியில் படித்துத் தேறியவர். அவரது நெடுநாளைய ஆசை சியாமா சாஸ்திரியின் க்ருதிகளை பொருத்தமான சௌந்தர்ய லஹரி ஸ்லோகத்துடன் துவங்கி கீர்த்தனைகளைப் பாட வேண்டும் என்பது. அந்த விருப்பத்தைத் தன் சிஷ்யை ஸ்நேகா மூலம் நிறைவேற்றிக் கொண்டுவிட்டார். |
|
இந்திரா பார்த்தசாரதி, சிமி வேல்லி, கலிஃபோர்னியா |
|
|
More