|
மே 2012: வாசகர் கடிதம் |
|
- |மே 2012| |
|
|
|
|
மகாகவி சுப்ரமணிய பாரதியின் வம்சாவழியில் வந்தவன் நான். சான் ஹோசேவில் உள்ள என் மகள் வீட்டுக்கு வந்துள்ளேன். தென்றல் ஏப்ரல் இதழையும் இன்னும் சில முந்தைய இதழ்களையும் படித்தேன். உயர்தரமானதொரு தமிழ்ப் பத்திரிகையைத் தொடர்ந்து வெளிக்கொண்டு வரும் உங்களுக்கு எனது பாராட்டுகள். தமிழ் சினிவைப் பற்றியே எழுதிக்கொண்டிருக்காமல், வேறு பலவற்றையும் நீங்கள் வெளியிடுவது மனதுக்கு இதமாக இருக்கிறது. உங்கள் இதழில் இளையோரின் பங்களிப்பைப் பார்க்க மிக மகிழ்ச்சியாக உள்ளது.
ஆர். சுந்தர், சான் ஹோசே
*****
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கெல்லாம் தென்றல் ஒரு அற்புதமான தகவல் களஞ்சியம். நான் வசிக்கும் ஃபிலடெல்ஃபியா பகுதியில் எந்தக் கடையிலும் இது கிடைப்பதில்லை. தென்றலில் வெளியாகும் கட்டுரைகள் எனக்கு உற்சாகம் தருகின்றன. இந்தியாவிலும் அமெரிக்காவிலும் இருக்கும் திறன்மிக்க இளையோரைப் பற்றி அறியவும் போற்றவும் தென்றல் வழி செய்கிறது. ‘நான் ஒரு இந்தியன்’ என்று பெருமிதம் கொள்ள வைக்கிறது. எனக்குப் பிரதிகளை அனுப்பி வையுங்கள். நான் என்னைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் கடைகளில் அவற்றை வினியோகத்துக்கு ஏற்பாடு செய்கிறேன். வத்சலா விவேக், ஃபிலடெல்ஃபியா |
|
|
|
|
|
|
|
|
|