அட்லாண்டா தமிழ் சபையில் பெரிய வெள்ளிக்கிழமை நாட்யா: 'Pushed to the Edge' Rebelution காஞ்சிபுரம் நிர்மலா சுந்தரராஜன்: 'பகவத் ஆராதனை' சத்குருவுடன் ஈஷா யோகா அட்லாண்டா: க்ரேஸியின் 'சாக்லேட் கிருஷ்ணா'
|
|
|
|
|
ஏப்ரல் 22, 2012 அன்று, SPICMACAY@UCI அமைப்பு லாவண்யா அனந்தின் நாட்டியக் கச்சேரி ஒன்றை மாலை 5:30௦ மணிக்கு வழங்க உள்ளது. அனுமதி இலவசம். இளைஞர்களுக்கான இந்தியப் பாரம்பரிய சங்கீதம் மற்றும் கலாசார மேம்பாட்டுச் சங்கமான SPICMACAY ஒரு லாபநோக்கற்ற, மத, அரசியல் சார்பற்ற மாணவர்களின் தன்னார்வச் சங்கம் ஆகும். இது 1997 ஆண்டு டாக்டர் கிரண் சேத் அவர்களால் நிறுவப்பட்டது. இந்தியாவின் எல்லா இசை, நாட்டிய பிரிவுகளின் சிறந்த வல்லுநர்கள் இதன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். உலகெங்கும் வருடந்தோறும் 1500க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் 800 அரங்குகளில் நடத்தப்படுகின்றன.
2006 மார்ச்சில் நிறுவப்பட்ட UC (இர்வைன்) SPICMACAY, S. சௌம்யா (கர்நாடக குரலிசை), ரவிகிரண் (சித்ரவீணை), பண்டிட் விஷ்வமோகன் பட் (மோகனவீணை), வீணா சஹாஸ்ரபுத்தே (ஹிந்துஸ்தானி சங்கீதம்) உட்படப் பல்வேறு வித்தகர்களின் கச்சேரிகளை நடத்தியுள்ளது. நடக்கவிருக்கும் லாவண்யா ஆனந்தின் நாட்டியக் கச்சேரி இந்த அமைப்பின் முதல் நாட்டிய அத்தியாயம் என்று சொல்லலாம். இவர் மிகவும் பிரசித்தி பெற்ற நாட்டியக் கலைஞர்களின் வழியில் வந்தவர். நவரச வெளிப்பாட்டிலும், அரங்கமெங்கும் தெய்வீகம் நிறைந்திருக்கச் செய்வதிலும் லாவண்யா பெயர் பெற்றவர்.
வலையகம்: www.clubs.uci.edu அரங்கம்: PSLH100, S Circle View Dr, Irvine, CA 92617 தேதி: ஏப்ரல் 22, 5:30PM தொடர்பு கொள்ள: ஸ்ரவந்தி ஸ்ரீதர், 916.337.7728, sravanthis@yahoo.com |
|
சுந்தர்ராஜன் கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரவந்தி ஸ்ரீதர், இர்வைன், கலிஃபோர்னியா |
|
|
More
அட்லாண்டா தமிழ் சபையில் பெரிய வெள்ளிக்கிழமை நாட்யா: 'Pushed to the Edge' Rebelution காஞ்சிபுரம் நிர்மலா சுந்தரராஜன்: 'பகவத் ஆராதனை' சத்குருவுடன் ஈஷா யோகா அட்லாண்டா: க்ரேஸியின் 'சாக்லேட் கிருஷ்ணா'
|
|
|
|
|
|
|