அட்லாண்டா தமிழ் சபையில் பெரிய வெள்ளிக்கிழமை நாட்யா: 'Pushed to the Edge' Rebelution லாவண்யா அனந்த்: பரத நாட்டியம் சத்குருவுடன் ஈஷா யோகா அட்லாண்டா: க்ரேஸியின் 'சாக்லேட் கிருஷ்ணா'
|
|
காஞ்சிபுரம் நிர்மலா சுந்தரராஜன்: 'பகவத் ஆராதனை' |
|
- ரூபா ரங்கநாதன்|ஏப்ரல் 2012| |
|
|
|
|
|
ஏப்ரல் 22, 2012 அன்று நியூ ஜெர்ஸி, மௌண்ட் டபோரில் (Mount Tabor) 1873ம் ஆண்டு கட்டப்பட்ட பழமை வாய்ந்த பெத்தல் (Bethel) அரங்கில் காஞ்சிபுரம் டாக்டர். நிர்மலா சுந்தரராஜன் அவர்களின் இசைக்கச்சேரி நடைபெறும். இவர் 35வது க்ளீவ்லாண்ட் தியாராஜ ஆராதனை விழாவில் கௌரவிக்கப்பட உள்ளார். இந்நிகழ்ச்சியில் பகவான் விஷ்ணுவின் மேல் பாடல்கள் பாடப்படும். பாடல் வரிகள், பாடலாசிரியர், ராகம், நடை ஆகியவற்றைப் பற்றிய அறிமுக உரை ஒவ்வொரு பாடலுக்கும் தரப்படும். நியூ ஜெர்ஸியைச் சேர்ந்த தாமோதரன் ஸ்ரீனிவாசன் மிருதங்கமும், ரவி ஸ்ரீனிவாசன் வயலினும் வாசிக்க உள்ளனர்.
நிர்மலா சுந்தரராஜன் அகில இந்திய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையங்களின் 'ஏ' கிரேட் கலைஞர். இந்திய இசையில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். அவர் சௌந்தராம்மாள், ராமநாதபுரம் கிருஷ்ணன், P.N. ராகவராவ், T. முக்தா, T.M. தியாகராஜன் ஆகியோரிடம் இசை பயின்றுள்ளார். இவர் 'கான கோகிலா','நாதக்கனல்', 'சங்கீத சிரோன்மணி' ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார். 2012 ஆம் ஆண்டு க்ளீவ்லாண்ட் தியாகராஜ ஆராதனை விழாவில் 'ஆச்சார்ய ரத்னாகர்' என்ற பட்டம் பெற உள்ளார். |
|
மேலும் விவரங்களுக்கு: ruparanganathan@yahoo.com
ரூபா ரங்கநாதன், நியூ ஜெர்சி |
|
|
More
அட்லாண்டா தமிழ் சபையில் பெரிய வெள்ளிக்கிழமை நாட்யா: 'Pushed to the Edge' Rebelution லாவண்யா அனந்த்: பரத நாட்டியம் சத்குருவுடன் ஈஷா யோகா அட்லாண்டா: க்ரேஸியின் 'சாக்லேட் கிருஷ்ணா'
|
|
|
|
|
|
|