பேபி கார்ன் தின்பண்டங்கள்
|
|
|
|
|
தேவையான பொருட்கள் பேபிகார்ன் - 10 அல்லது 12 அரிசி - 1/2 கிண்ணம் துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி கடலைப்பருப்பு - 1/2 கிண்ணம் மிளகாய் வற்றல் - 8 மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி பெருங்காயப் பொடி - சிறிதளவு கார்ன் ஃப்ளோர் - 2 தேக்கரண்டி நெய் - 1 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - பொரிப்பதற்கு |
|
செய்முறை பேபி கார்னை அலம்பித் துடைத்து இரண்டு ஓரங்களையும் சிறிது நறுக்கி நீளவாட்டில் சிறிது கீறி வைக்கவும். அரிசி, துவரம் பருப்பு, கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்து, உப்பு, மிளகாய், பெருங்காயம் சேர்த்து நைசாக பஜ்ஜி மாவுப் பதத்திற்கு அரைத்துக் கொண்டு கார்ஃன் ஃப்ளோரும், மஞ்சள் தூளும் பொட்டுக் கலக்கவும். எண்ணெயுடன் சிறிது நெய் கலந்து அடுப்பில் காய வைக்கவும். பேபி கார்னை மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். இதைத் தேங்காய்ச் சட்னியுடன் சாப்பிடலாம். மிளகாய் பஜ்ஜி போலச் சுவையாக இருக்கும். ப்ரட் க்ரம்ஸில் பிரட்டியும் பொரித்துச் சாப்பிடலாம்.
தங்கம் ராமசாமி, ப்ரிட்ஜ்வாட்டர், நியூஜெர்ஸி |
|
|
More
பேபி கார்ன் தின்பண்டங்கள்
|
|
|
|
|
|
|