சிமி வேல்லி: குடியரசு தினம் சிகாகோ தமிழ்ச் சங்கம்: பொங்கல் விழா LA மலிபு கோவில்: இன்னிசைப் பெருவிழா மிச்சிகன்: பொங்கல் விழா வாஷிங்டன்: தியாகராஜ ஆராதனை பொறியியல் கல்லூரி மாணவர் சந்திப்பு ஈஷா வித்யா: இசை மழை BATM: பொங்கல் விழா வர்ஜீனியா: அத்யயன உத்சவம் ஆல்ஃபரட்டா தமிழ்ப் பள்ளி: கிறிஸ்துமஸ் லில்பர்ன் தமிழ்ப் பள்ளி: பண்டிகைக் கொண்டாட்டம்
|
|
லக்ஷ்யா பாலகிருஷ்ணன்: 'யஜாமஹே' |
|
- |பிப்ரவரி 2012| |
|
|
|
|
|
ஜனவரி 21, 2012 அன்று பாலோ ஆல்டோவின் கபர்லி அரங்கத்தில் 'யஜாமஹே' என்ற தலைப்பில் லக்ஷ்யா பாலகிருஷ்ணனின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி 'ஜீனா' ( target="_blank">www.jeena.org) சேவை அமைப்புக்கு நிதி திரட்டும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டது. மில்பிடாஸ் நகர மேயர் மேதகு ஜோஸ் ஈஸ்டேவேஸ் நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சி, கணேச சுலோகம் மற்றும் சிவ ஸ்தோத்ரமான 'ஜெய ஜெய சம்போ' ராகமாலிகையில் தொடங்கியது. அடுத்து ஆதி சங்கரரின் சிவ பஞ்சாட்சரத்திற்கு லக்ஷ்யா அருமையாக ஆடினார். பின்னர் கௌளையில் பதஞ்சலி முனியின் காலி கௌத்துவம், முத்தையா பாகவதரின் 'கால ராத்திரி' ஆகியவற்றுக்கு குரு விஷால் ரமணியின் நடன வடிவமைப்பு அற்புதம். அடுத்து வந்த தஞ்சை நால்வரின் 'சாமியை அழைத்துவாடி சகியே' கமாஸ் வர்ணத்தில் லக்ஷ்யா நாயகியின் தவிப்பை நன்றாகச் சித்தரித்தார். பின்னர் நாட்டக்குறிஞ்சியில் 'வழி மறைத்திருக்குதே', சுவாதித் திருநாளின் 'விஸ்வேஸ்வர தர்சன்' ஆகியவற்றுக்குப் பின் பட்டணம் சுப்ரமணிய ஐயரின் கமாஸ் ராகத் தில்லானாவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
லக்ஷ்யா பாலகிருஷ்ணனின் பரதநாட்டிய அரங்கேற்றம் ஆகஸ்ட் 2010ல் நடைபெற்றது. இவர் ஸ்ரீ கிருபா டான்ஸ் பள்ளியில் ஏழாண்டுகளாக நடனம் பயின்று வருகிறார். தற்போது கூபர்டிநோவில் உள்ள லாசன் மிடில் ஸ்கூலில் ஏழாம் வகுப்பு பயில்கிறார். |
|
செய்திக் குறிப்பிலிருந்து |
|
|
More