ஒய்.ஜி. மகேந்திரனின் 'வெங்கடா3' தேவை: பெர்க்கலி தமிழ்ப் பிரிவுத் துணைப் பேராசிரியர் கேட்க ஒரு தென்றல்! ஆமை வேகம்!
|
|
ரம்யாவுக்கு 'லாஸ்ய யுவ பாரதி' விருது |
|
- சாரதா|டிசம்பர் 2011| |
|
|
|
|
|
குரு விஷால் ரமணி அவர்களின் சிஷ்யையான ரம்யா ரமேஷ், 'லாஸ்ய யுவ பாரதி' விருதை பென்சில்வேனியாவின் ஸ்ட்ரௌட்ஸ்பர்கில் சிருங்கேரி சாதனா மையம் நடத்திய 'நாதஸ்வரூபிணி 2011' போட்டியில் வென்றுள்ளார். நவம்பர் 5, 2011 அன்று நடைபெற்ற இந்தப் போட்டியில் நடனத் திறன் மட்டுமல்லாமல் பங்கேற்பவர் உடனடியாகச் சிந்தித்த நடன வடிவமைக்கும் திறனும் சோதிக்கப்படும். அமெரிக்கா எங்கிலுமிருந்து வந்திருந்தோர் பங்கேற்ற இந்தப் போட்டியில் கலிஃபோர்னியாவின் நிஷா பலராமன் இரண்டாம் இடத்தையும், மிச்சிகனின் அபூர்வா மல்லாடி மூன்றாம் இடத்தையும் வென்றனர்.
பென்சில்வேனியாவின் ரதிப்ரியா சுரேஷ் பாராட்டுப் பரிசையும், நியூ ஜெர்சியின் டிம்பிள் ஷா ரசிகர்களிடம் அதிகக் கைதட்டல் பெற்றதற்கான பரிசையும் வென்றனர்.
சிருங்கேரி சங்கராசாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகளின் அருளாசியுடன் நடத்தப்படும் போட்டிகள் கர்நாடக இசை வாய்ப்பாட்டு, கருவியிசை, செவ்வியல் நடனங்கள் ஆகியவற்றில் சிருங்கேரி வித்யா பாரதி அறக்கட்டளையால் நடத்தப்படுகிறது. |
|
சாரதா, ஸ்ட்ரௌட்ஸ்பர்க் |
|
|
More
ஒய்.ஜி. மகேந்திரனின் 'வெங்கடா3' தேவை: பெர்க்கலி தமிழ்ப் பிரிவுத் துணைப் பேராசிரியர் கேட்க ஒரு தென்றல்! ஆமை வேகம்!
|
|
|
|
|
|
|