ரசமான ரசங்கள்
|
|
|
|
தேவையான பொருட்கள் மோர் - 2 கிண்ணம் ரசப்பொடி - 1 தேக்கரண்டி பச்சை மிளகாய் - 2 மிளகாய் வற்றல் - 2 இஞ்சி - சிறுதுண்டு கடுகு - 1 தேக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி துவரம் பருப்பு வேகவைத்த நீர் - 1/2 கிண்ணம் பெருங்காயம் - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப நெய் - சிறிதளவு கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை மோரைக் கடைந்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி உப்பு, ரசப்பொடி, இஞ்சியைத் தட்டிப் போட்டு மிளகாயை லேசாக அரைத்துப் போட்டு, பெருங்காயம் சேர்த்துக் கொதிக்க விடவும். பொடி வாசனை போனபின் துவரம்பருப்பு வேகவைத்த நீர், மோர் இவற்றை விட்டு விளாவி நுரைத்து வரும்போது இறக்கி நெய்யில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும். பருப்பு இல்லாமலும் செய்யலாம். மோர் விளாவி உடனே இறக்கி விடலாம். அதிகநேரம் இருந்தால் மோர் திரிந்தாற்போல் ஆகி விடும். இது மிகச் சிறந்த பத்திய ரசம். ஜுரம் இருப்பவர்கள் சாப்பிடலாம். ஜுரமடிக்கும் வாய்க்குச் சுவையாக இருக்கும். |
|
தங்கம் ராமசாமி, ப்ரிட்ஜ் வாட்டர், நியூஜெர்ஸி |
|
|
More
ரசமான ரசங்கள்
|
|
|
|
|
|
|