பெர்க்கலி பல்கலைக்கழகத்தின் பாலம் மாநாடு பெர்க்கலி தமிழ் பீடத்தின் சேவைகள் கிருஸ்ணலீலா தரங்கிணியில் சைவ வைணவ இணக்கம்
|
|
பெர்க்கலி தமிழ் பீடத்தின் எதிர்காலம் |
|
- சிவா சேஷப்பன்|ஏப்ரல் 2007| |
|
|
|
சான் ·பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி நிதி திரட்டும் குழுவின் பெரு முயற்சியால் பெர்க்கலி பல்கலைக் கழகத்தின் தெற்காசியத் துறையின் கீழ் தமிழ்ப் பீடம் 1996 நவம்பரில் நிறுவப் பட்டது. தமிழ்ப் பீடத்தின் தலைவராக பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் நியமிக்கப் பட்டார். தமிழ்ப் பீடத்தின் வரலாறு பற்றிய விவரங்களை http://tamil.berkeley.edu/Tamil%20Chair/Background.html என்ற வலைதளத்தில் காணலாம்.
சென்ற ஆண்டு நவம்பரில் தமிழ்ப் பீடத்தின் 10-ஆவது ஆண்டு நிறை வேறியது. பெர்க்கலி பல்கலைக் கழகம் பேரா. ஜார்ஜ் ஹார்ட்டை, தமிழ்ப் பீடத்தின் தலைவராக மேலும் ஐந்து வருடங்களுக்கு நியமித்திருக்கிறது. 'பேரா. ஹார்ட் ஓய்வு பெற்றபின் தமிழ்ப் பீடத்தின் எதிர்காலம் என்ன? பெர்க்கலியில் தமிழ்த் துறையும், தமிழ் பட்டப் படிப்பும் தொடருமா?' என்ற பல சந்தேகங்கள் தமிழ்ச் சமூகத்தின் இடையே எழுந்தது.
இந்தச் சந்தேகங்களைத் தீர்த்து, பெர்க்கலி யில் தமிழ்ப் பீடம் தொடரும் என்று உறுதி பெறத் தெற்காசியத் துறையுடன் ஒரு குழு மார்ச் 9-ஆம் தேதி நேரடியாக சந்தித்துப் பேசி யது. இந்தக் குழுவில் தமிழ்ப்பீடம் அமைப் பதற்கு நிதி திரட்டும் குழுவின் தலைவராக இருந்த குமார் குமரப்பன், அதன் பொருளா ளராக இருந்த பாலா பாலகிருஷ்ணன், வளைகுடாப்பகுதித் தமிழ் மன்றத்தை நிறுவியவர்களில் ஒருவரான தமிழன் பாக்கி யராஜ், அதன் தற்போதைய தலைவர் குறிஞ்சி குமரன், தமிழ்ப் பீடம் நிறுவ நிதி கொடுத்த வள்ளல்களில் ஒருவரான வெங்கடாசலம் ஆகியோர் இருந்தனர். இவர்கள் தெற்காசியத் துறையின் தலைவர் அலெக்ஸாண்டர் ராஸ்பாட், துணைத் தலைவர் முனைவர் சஞ்சிதா சக்ஸேனா, பேரா. ராகா ரே, பேரா. ஜார்ஜ் ஹார்ட், பேரா. கௌசல்யா ஹார்ட் ஆகியோரைச் சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பின்போது பேரா. ஜார்ஜ் ஹார்ட் ஓய்வு பெற்ற பிறகும் ஒரு முழுநேரப் பேராசிரியர் தமிழ்த் துறைக்கு நியமிக்கப் படுவார் என்ற உறுதிமொழி கிடைத்தது. அந்த உறுதிமொழியை மின்னஞ்சல் மூலமாகவோ, அல்லது கடிதம் மூலமாகவோ எழுத்து வடிவத்தில் கொடுக்கும்படி வேண்டு கோள் விடுத்துள்ளனர்.
அதே சமயம் தெற்காசியத் தமிழ்த் துறைக்கு மேலும் நிதி திரட்டிக் கொடுப் பதின் மூலம் தமிழ்த்துறை நிரந்தரமாகச் செயல்படவும், விரிவடையவும் வாய்ப்புகள் அதிகம் என்று பெர்க்கலி தெற்காசியத் துறை கூறியுள்ளது. தற்போதுள்ள தமிழ்ப் பீடத்திற்கு மேலும் நிதி அளிப்பதற்குப் பதில் கீழ்கண்ட நிதி திரட்டும் முயற்சியில் தமிழ்ச் சமூகம் ஈடுபட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. |
|
$50,000 – Endowed General Fund $50,000 – Endowed Scholarship Fund $250,000 – Berkeley Endowed Scholarship $500,000 – Berkeley Endowed Fellowship $500,000 – Faculty Excellence Endowed Fund $1,000,000 – Endowed Professorship $3,000,000 – Distinguished Endowed Chair $5,000,000 – Chancellor’s Endowed Chair
இதைப் பற்றி மேலும் விவரங்கள் அறிய விரும்புவோரும், பெர்க்கலி தமிழ்த் துறை விரிவடைய நிதி திரட்ட விருப்பம் உள்ளவர்களும், batcc.director@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
சிவக்குமார் சேஷப்பன் |
|
|
More
பெர்க்கலி பல்கலைக்கழகத்தின் பாலம் மாநாடு பெர்க்கலி தமிழ் பீடத்தின் சேவைகள் கிருஸ்ணலீலா தரங்கிணியில் சைவ வைணவ இணக்கம்
|
|
|
|
|
|
|