பெர்க்கலி பல்கலைக்கழகத்தின் பாலம் மாநாடு பெர்க்கலி தமிழ் பீடத்தின் எதிர்காலம் கிருஸ்ணலீலா தரங்கிணியில் சைவ வைணவ இணக்கம்
|
|
|
'தமிழை போதிப்பதோடு மட்டுமின்றி, தமிழைப் பரப்ப வருடாந்திர மாநாடு நடத்துவது, தமிழில் மேல்படிப்பைத் தொடர உதவித் தொகை அளிப்பது, வெளிநாடு களில் இருந்து தமிழ் அறிஞர்களை வர வழைத்து பல்கலைக் கழகத்தில் போதிக்க வைப்பது போன்ற சேவைகளையும், பெர்க்கலி தமிழ்ப் பீடம் செய்து வருகிறது' என்று விளக்குகிறார் பேராசிரியர் கௌசல்யா ஹார்ட். 2002-ல் வளைகுடாப் பகுதியில் நடந்த தமிழ் இணைய மாநாட்டின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து தமிழ்ப் பீடம் 10,000 டாலர் நிதியுதவி செய்ததையும் சுட்டுகிறார். தமிழ் நாட்டில் இருந்து அழைத்து வந்த தமிழ் அறிஞர்களில் பேராசிரியர் மறைமலை, எழுத்தாளர் திலீப் குமார், மதுரைப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் பாரதி, பாளையங்கோட்டையிலிருந்து பேராசிரியர் முத்துசிதம்பரம் போன்றோரைச் சுட்டிக் காட்டுகிறார்.
ஜார்ஜ் ஹார்ட் தமிழ்ப் பீடத்தின் முழுநேரப் பேராசிரியர், கௌசல்யா ஹார்ட் பகுதி நேரப் பேராசிரியர். பெர்க்கலி பல்கலைக் கழகத்தில் முதல் வருடப் பட்டப் படிப்பில் 10 மாணவர்களும், இரண்டாம் வருடத்தில் 10 மாணவர்களும் இருக்கிறார்கள். தமிழ் முனைவர் பட்டம் பெற ஆராய்ச்சியில் 10 மாணவர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள். சங்க காலம் முதல், நவீன காலம் வரை இலக்கியம், இலக்கணம், சரித்திரம் என்று பல கோணங்களில் இந்த மாணவர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
பெர்க்கலியின் தமிழ்த் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், மிச்சிகன் பல்கலைக் கழகப் பேராசிரியர் முனைவர் சுமதி ராமசுவாமி, ஹார்வர்ட் பல்கலைக் கழகப் பேராசிரியர் முனைவர் ஆன் மோனியஸ் (Anne Monius), லண்டன் பல்கலைக் கழகப் பேராசிரியர் முனைவர் ஸ்டூவர்ட் பிளாக்பர்ன் (Stuart Blackburn), நியூ யார்க்கில் உள்ள செயிண்ட் லாரன்ஸ் பல்கலைக் கழகப் பேராசிரியர் முனைவர் அர்ச்சனா வெங்கடேசன், சான் ·பிரான் சிஸ்கோ பல்கலைக் கழகப் பேராசிரியர் முனைவர் விஜயா நாகராஜன் ஆகியோர். இவர்கள் தமிழ்த் துறைகள் மட்டுமன்றி மதம், சரித்திரம் போன்ற துறைகளிலும் பேராசிரியர்களாக இருக் கிறார்கள். இவர்கள் தமிழிலும், தமிழ் பற்றியும் பல புத்தகங்கள் வெளியிட்டிருக் கிறார்கள். உதாரணத்திற்கு, ஸ்டூவர்ட் பிளாக்பர்ன் என்று Amazon.com-ல் தேடினால் இவர் எழுதிய புத்தகங்கள் பெரிய அட்டவணை யாக வருகிறது. |
|
பெர்க்கலி பல்கலைக் கழகத்தின் நூலகத்தில் கிட்டத்தட்ட 10,000 தமிழ் நூல்கள் இருக்கின்றன என்று குறிப்பிடு கிறார் கௌசல்யா ஹார்ட். தமிழ் சம்பந்தப்பட்ட ஆங்கிலப் புத்தகங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் அது 10,000-யும் தாண்டிவிடும் என்கிறார். அமெரிக்காவில் பெர்க்கலியைத் தவிர சிகாகோ, ·பிலடெல்·பியா, டெக்சாஸ், மிச்சிகன், யேல், சிரகுயிஸ் பல்கலைக் கழகங்களில் தமிழ் போதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது. மேடிசனில் உள்ள விஸ்கான்ஸின் பல்கலைக் கழகத்தில் கோடைப் பருவ வகுப்புகளில் மாத்திரம் தமிழ் போதிக்கப்படுகிறது.
சிவக்குமார் சேஷப்பன் |
|
|
More
பெர்க்கலி பல்கலைக்கழகத்தின் பாலம் மாநாடு பெர்க்கலி தமிழ் பீடத்தின் எதிர்காலம் கிருஸ்ணலீலா தரங்கிணியில் சைவ வைணவ இணக்கம்
|
|
|
|
|
|
|