குஷ்டமும் கஷ்டம் அல்ல! துப்புரவுத் தொழிலாளி காந்தி கைத்துப்பாக்கி காப்பாற்றாது காந்திஜியின் நகைச்சுவை குற்றாலமும் வேண்டாம்!
|
|
ஐந்தே நிமிடங்கள்! |
|
- |அக்டோபர் 2011| |
|
|
|
|
ஒருமுறை காந்தியடிகள் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். மணி என்ன என்று அருகிலிருந்த செயலாளர் கல்யாணத்திடம் விசாரித்தார். கல்யாணம் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டு ஐந்து மணி என்று சொன்னார். காந்தி தன் இடுப்பிலிருந்த கடிகாரத்தை எடுத்துப் பார்த்தார். ஐந்தாக ஐந்து நிமிடங்கள் இருந்தன. உடனே கல்யாணத்திடம் "இன்னும் ஐந்தாகவில்லையே!" என்றார்.
அதற்குக் கல்யாணம், "ஆமாம்! நான்கு ஐம்பத்தைந்துதான் ஆகிறது" என்று சொன்னார். அதைக் கேட்டதும் காந்திஜி கூறினார், ""ஐந்து நிமிடம் என்பது இந்தியர்களின் வாழ்வில் மிக முக்கியமானது. ஐந்து நிமிடத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஒரு நிமிடத்தில் எவ்வளவோ வெற்றி, தோல்விகள் மாறியிருக்கின்றன. கையில் கடிகாரம் கட்டிக் கொண்டும் சரியான நேரம் சொல்லத் தவறிய உங்களை என்ன செய்வது? உங்களுக்கெல்லாம் எதற்குக் கடிகாரம்?" என்று கடிந்து கொண்டார்.
காலத்தின் மதிப்பை உணர்ந்த அவர் காலங்களைத் தாண்டி நிற்கிறார். |
|
|
|
|
More
குஷ்டமும் கஷ்டம் அல்ல! துப்புரவுத் தொழிலாளி காந்தி கைத்துப்பாக்கி காப்பாற்றாது காந்திஜியின் நகைச்சுவை குற்றாலமும் வேண்டாம்!
|
|
|
|
|
|
|