மிச்சிகனில் ஹோமம் ரசிகா குமாரின் 'தைரியம்' நாட்யாஞ்சலியின் 'கதைகளும் காவியங்களும்' கிண்டி பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் கூட்டம் FeTNA ஆண்டுவிழா தூய மரியன்னையின் திருவிழா நிமிஷா கணேஷ் பரதநாட்டிய அரங்கேற்றம் நிருத்ய சங்கல்பாவின் 'அர்ப்பண்' NRI நடன விழா 'குரு சிஷ்ய பரம்பரை'
|
|
|
|
|
ஜூலை 9, 2011 அன்று சன்னிவேல் சனாதன தர்ம கேந்திரக் கோவிலில் 'பால சம்ஸ்க்ரிதி சிக்ஷா' அமைப்பைச் சேர்ந்த சிறார்கள் ஒரு தெய்வீக இசை மற்றும் நாடக நிகழ்ச்சிகளை நடத்தினர். பங்குபெற்ற அத்தனை குழந்தைகளும் 3 முதல் 7 வயதுக்குட்பட்டவர்கள். தெளிவான உச்சரிப்புடனும், நல்ல சுருதி லயத்துடனும், பக்தியுடனும் அவர்கள் சமஸ்கிருத சுலோகங்கள், நாமாவளிகளை இசைத்தனர்.
'தாமோதரா' என்ற கிருஷ்ணா லீலா நாடகத்தில் நடித்த குழந்தைகள் கவனத்துடன் சரியாக ஆங்கிலத்தில் வசனம் பேசி நடித்தனர். குழந்தைகள் செய்த பயிற்சிப் பாடங்கள் அரங்கில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. பால சம்ஸ்க்ரிதி சிக்ஷா அமைப்பு வளைகுடாப் பகுதியில் வாழும் இந்தியக் குழந்தைகளுக்கு ஹிந்து பண்பாடு, தெய்வ நம்பிக்கை, கலாச்சாரம் ஆகியவற்றை போதிக்கும் எண்ணத்துடன் நீரஜா, மகேஸ்வரி ஆகியவர்களால் 2010ம் ஆண்டு தொடங்கப்பட்டது. |
|
பிரதி வெள்ளி மாலை 5:30 முதல் 6:30 மணிவரை இவர்கள் நடத்தும் வகுப்புகள் சனாதன தர்ம கேந்திராவில் நடைபெறுகின்றன. சுலோகம், எளிய பஜனைப் பாடல்கள் தவிரப் புராணக் கதைகள் சொல்லித் தரப்படுகின்றன. வழிபாட்டு வழிமுறைகளும், தியானமும் இங்கு வசிக்கும் குழந்தைகள் பின்பற்றும் வகையில் எளிய முறையில் கற்பிக்கப் படுகிறது. உடன்வரும் பெரியவர்களும் நிறையக் கற்றுக்கொள்ள முடிகிறது என்று பெற்றோர்கள் சொல்கிறார்கள். ரோஹிணி ராமச்சந்திரன், சான்டா கிளாரா |
|
|
More