மார்ச் 19, 2011 அன்று வளைகுடாப் பகுதியில் உள்ள புஷ்பாஞ்சலி நடனப் பள்ளியின் 15வது ஆண்டுவிழா பாலோ ஆல்டோவின் கபர்லி தியேட்டரில் நடந்தது. விழாவை மாணவிகள் அங்கிதா, அனன்யா, விட்டல தேவுணி, மைத்திரி, சமேதா, அனன்யா ஆனந்த், ஹிமானி, அன்விதா, ஸ்ருதி, ஸ்ரீநிதி, அபர்ணா கீர்த்தி, நிகிதா, விஸ்மயா, செவந்தி, தேஜஸ்வினி, அனன்யா ஜெயப்பிரகாஷ் ஆகியோர் சுலோகம் பாடித் துவக்கி வைத்தனர். தொடர்ந்து திருப்பாவைப் பாடல்களுக்கு மாணவிகள் ஆருஷி, கிருத்திகா, மோனிவா, ஷ்ரேயா, குஷி, மஹிமா, நிவேதா மாதவன், ஹியா, ஹரிணி, பிரார்ணா, வைஷ்ணவி, ரித்திகா ஆகியோர் அழகாக அபிநயம் பிடித்து ஆண்டாளையும், கண்ணனையும் கண்முன் நிறுத்தினர்.
கிருஷ்ணனின் அழகை மதுராஷ்டகம் மூலமாக மித்ரா, சிருஷ்டி, சுப்ரியா, அலேக்யா, சரிதா, சுரூஷா, அஞ்சனா, சூர்யா, திவ்யா, நிதிலா ஆகியோர் ஆடிச் சித்திரித்தனர். தொடர்ந்த புஷ்பாஞ்சலியில் சமேஹிதா, டாகினி, ஸ்வாதி, சந்தோஷ், ஜனனி, கிரந்தசி, ரசிகா, ஹரிதா ஆகியோர் ஆடிய நடனம் மனதைக் கொள்ளை கொண்டது. அடுத்து சவிதா, நிவேதிதா, ஸ்பூர்த்தி, அதிதி, லக்ஷ்மி, சும்ரிதா, ஷ்ரத்தா ஆகியோர் அலாரிப்பு வாயிலாகச் சில அடவுகளை ஆடியது சிறப்பு. தொடர்ந்து ப்ரீஷா, ஹரிப்ரியா, ரித்திகா, அஞ்சனி, அனன்யா, ஜனனி, நித்யா, நியதி, நிகிதா, ஷிரியா ஆகியோர் ஜதீஸ்வரத்துக்கு அபிநயம் பிடித்தது அருமை. 'காஞ்ச தளாயதாக்ஷி' பாடலுக்கு மாயா, ஷிரியா, ராதிகா, ரம்யா ஆகியோர் மனமுருகி ஆடியது நெஞ்சைக் கவர்ந்தது. 'பரம புருஷா' பாடலுக்கு மாணவிகள் மேக்னாவும், சோனிகாவும் ஆடிப் பத்மநாபனைக் கண்முன் கொண்டு வந்தனர். நாட்டியத்தின் நவரசத்தையும் ராமாயணப் பாடல் மூலம் அனுஷா, ஊர்மிளா, மிருதுளா, மதுமிதா அபிநயித்தனர். இறுதியில் சந்தோஷ், வள்ளி, அபூர்வா, ஹரிதா, கிரந்தசி, ஜனனி, மார்தா, ரசிகா ஆகியோர் ஆடிய தில்லானாவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. விழாவின் முடிவில் குரு திருமதி மீனா லோகன் மாணவ, மாணவியருக்குப் பரிசுக் கோப்பைகளை வழங்கினார். |