சாதனைப் பாவையர்: ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன் சாதனைப் பாவையர்: ஜெயஸ்ரீ ஸ்ரீதர் சாதனைப் பாவையர்: மாஷா நஸீம் சாதனைப் பாவையர்: ராஜலட்சுமி
|
|
|
|
|
விஜி வரதராஜன் சென்னையைச் சேர்ந்தவர். எத்திராஜ் கல்லூரியில் பட்டம் பெற்ற இவருக்கு இளவயதிலிருந்தே சமையற்கலையில் மிகுந்த ஆர்வம். தாயிடமும், பின்னர் மாமியாரிடமும் சமையல் நுணுக்கங்களைக் கற்றறிந்தவர், தானே புதுவகை உணவுகளைக் கண்டுபிடித்துச் சமைத்துப் பார்த்தார். அந்த நுணுக்கங்களை நண்பர்களுக்கும் சொல்லிக் கொடுத்தார். பயன் பெற்றவர்கள் வற்புறுத்தவே, 2001ல் 'Samayal-The Pleasures of South Indian Vegetarian Cooking' என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார். அது சூடாக விற்பனை ஆனதைத் தொடர்ந்து, 'Festival Samayal-An Offering to the Gods', 'Healthy Taste of Indian Culture: Cooking with Yoghurt' ஆகிய புத்தகங்களை வெளியிட்டார். அவற்றையும் மக்கள் அள்ளிக் கொண்டு போயினர்.
சமையல் குறித்த சிறந்த புத்தகங்களுக்கு விருது வழங்கும் Gourmand World Cook Book சிறந்த புத்தகத்துக்கான விருதை இவரது மூன்று புத்தகங்களுக்குமே வழங்கி கௌரவித்தது. ஆஸ்கார் விருதுக்கு இணையாகக் கருதப்படும் இந்த கௌரவத்தைப் பெற்ற முதல் தென்னிந்தியப் பெண்மணி விஜிதான். இதில் முக்கியமான விஷயம் விஜி வரதராஜன் எழுதியிருக்கும் அனைத்து நூல்களுமே தென்னிந்திய சைவ உணவுகள் பற்றியவை என்பதுதான். |
|
தொடர்ந்து சமைத்தும் எழுதியும் குவிக்கும் விஜி, "தமிழ் பிராமணர் சமையல் தொடர்பான புத்தகம் ஒன்றை நானும், பத்மினி நடராஜன் என்பவரும் இணைந்து எழுதி வெளியிட்டுள்ளோம். விருதுக்கு இப்புத்தகத்தை அனுப்பி வைக்கத் தீர்மானித்துள்ளோம்" என்கிறார். இவரது கைமணத்தை நுகர: www.vijisamayal.org
ஸ்ரீவித்யா ரமணன் |
|
|
More
சாதனைப் பாவையர்: ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன் சாதனைப் பாவையர்: ஜெயஸ்ரீ ஸ்ரீதர் சாதனைப் பாவையர்: மாஷா நஸீம் சாதனைப் பாவையர்: ராஜலட்சுமி
|
|
|
|
|
|
|