தெற்காசிய இதய மையம் அளிக்கும் சிவப்பு இரவு-2011 பாரதி தமிழ்ச் சங்கத்தின் இரண்டு விழாக்கள் உதவும் கரங்களுக்காக 'கும்கா' கனெக்டிகட் தமிழ்ச் சங்கம்: சித்திரைத் திருநாள்
|
|
10வது தமிழ் இணைய மாநாடு |
|
- |மார்ச் 2011| |
|
|
|
|
|
2011 ஜூன் 17-19 நாட்களில் பத்தாவது தமிழ் இணைய மாநாட்டை உத்தமம் அமைப்பும் (http://www.infitt.org) பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்தின் தெற்காசியத் துறையும் (southasia.upenn.edu) இணைந்து, பென்சில்வேனியாப் பல்கலைக்கழக வளாகத்தில் நடத்த உள்ளனர்.
பென்சில்வேனியாப் பல்கலையில் தமிழ்ப் பணி செய்துவரும் பேரா. ஹெரால்டு ஷிஃப்மேன் மற்றும் முனைவர் வாசு அரங்கநாதன் இம்மாநாட்டின் உள்ளூர்க் குழுவுக்குத் தலைமையேற்று நடத்தித் தருவார்கள். உத்தமத்தின் முன்னாள் தலைவர் கு. கல்யாணசுந்தரம் மாநாட்டின் நிகழ்ச்சிக் குழுவுக்குத் தலைமையேற்பார்.
இம்மாநாட்டின் மையக் கருத்து 'கணினியினூடே செம்மொழி' என்பதாகும். கணினி வழியாகத் தமிழ் இலக்கியங்களை ஆய்ந்தறியும் வழிவகைகளைப் பற்றி நிகழ்வுகள் இருக்கும். இலக்கியங்களை மின்வடிவில் சேமித்து வைக்க மட்டுமல்லாமல் கணினியைச் சொற்களையும் வாக்கியங்களையும் பொருளையும் அலசிப்பார்க்கும் ஒரு திறன்வாய்ந்த மின்சாதனமாகக் காணும் முயற்சிகளுக்கு வழிவகுக்கும் வண்ணம் கணினி வல்லுனர்களும் தமிழ் இலக்கிய வல்லுனர்களும் கருத்துப் பரிமாற்றம் செய்வர். இலக்கியங்களைக் கணினி வழியே அலசி ஆய்ந்தறிய www.thetamillanguage.com/sangam போன்ற தேடுபொறிகள் தமிழுக்கு மிகவும் தேவை. இவ்வகை ஆராய்ச்சியின் தேவையை மாநாடு வலியுறுத்தும்.
தமிழ் உரையினின்று பேச்சை அளிக்கும் mile.ee.iisc.ernet.in, கணினி வாயிலாகத் தமிழ் பயில்வதற்கான southasia.upenn.edu, thetamillanguage.com போன்றவை, செல்பேசியில் தமிழ் (sellinam.com) பற்றிய ஆய்வுகள் என்று பல சிறந்த பணிகள் தமிழ் இணைய மாநாடுகள் வாயிலாக முன்னெடுத்துச் செல்லப்பட்டன. கணினியில் தமிழ் தட்டச்சு செய்ய உதவும் thamizha.com, software.nhm.in போன்ற கணினி நிரலிகள் தமிழுலகுக்கு முந்தைய மாநாடுகளில் வழங்கப்பட்டன. வரும் மாநாட்டிலும் தமிழ்க் கணினி ஆய்வாளர்கள் பலர் பயனுள்ள பங்களிப்பார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.
இம்மாநாட்டில் கட்டுரை படைக்க விரும்புவோர் கணினி வழித் தமிழ் இலக்கியங்களை ஆய்வு செய்யும் வழிவகைள் குறித்தும் கணினிவழி மற்றத் தமிழ் ஆய்வுகள் குறித்தும் தங்களின் கட்டுரைச் சுருக்கங்களை மார்ச் மாதம் 15ஆம் தேதிக்குள் ti2011@infitt.org என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். |
|
கீழ்க்கண்ட தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் கட்டுரைச் சுருக்கத்தை அனுப்பலாம்:
- கணினிவழி தமிழ்ச் சங்க இலக்கிய ஆய்வு: தமிழ் இலக்கியத் தரவை அலசி ஆய்தல், தமிழ் இலக்கியங்களுக்கான தேடுபொறிகளை அமைத்தல், தமிழ் இலக்கியங்களின் கால அறுதியிடல், இலக்கிய ஆசிரியர்களின் நடை அறிதல் போன்ற கணினிவழி ஆய்வுக்கான நிரலிகள்.
- தமிழ்க் கணினி நிரல்கள்: சொற்பகுப்பு நிரலிகள், சொல் திருத்திகள், இலக்கணத் திருத்திகள், மின்னகராதி அமைத்தல்.
- திறவூற்று மென்பொருள், தமிழ் குறித்தான நிரலிகள் மற்றும் கணினிச் செயலாக்கிகள்.
- தமிழைப் பயன்படுத்தும் வகையிலான கையடக்கக் கருவிகள், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் அவற்றின் தர நிர்ணயப்படுத்தல். இக்கருவிகளில் பயன்படுத்தப்படும் தமிழ்க் கணினி நிரலிகள்.
- இயற்கை மொழிப் பகுப்பாய்வு, இயந்திர மொழிபெயர்ப்பு, தமிழ் எழுத்துரு பகுப்பான்கள், தமிழ்ப் பேச்சு பகுப்பாய்வு நிரல்கள், தேடுபொறிகள், தமிழ்த் திறனாய்வு நிரல்கள், தமிழ்த் தேடுபொறிகள்.
- தமிழ் இணையம்: தமிழ் வலைப்பூக்கள், விக்கிபீடியா நிரலிகள், செய்திப்பரப்பி நிரலிகள், தமிழ்க் கல்வி நுழைவுப் பக்கங்கள், தமிழ் மின்வணிக நிரலிகள் முதலியன.
- இணையம் மற்றும் கணினிவழி தமிழ் கற்றலும் கற்பித்தலும்.
- தமிழ்த் தரவுகள், மின்னகராதிகள், மின்வணிகமுறைகள்.
கட்டுரைகளை ஆங்கிலத்திலோ தமிழிலோ தமிழும் ஆங்கிலமும் கலந்தோ படைக்கலாம். தமிழில் எழுதப்பட்ட கட்டுரைகளைத் ஒருங்குறித் தமிழில் மட்டுமே அனுப்பவும். மாநாடு குறித்து மேலும் விளக்கங்களைப் பெற மின்னஞ்சல்: ti2011@infitt.org
தமிழ் இணையம் 2011, மாநாட்டு வலைப்பக்கம்: www.infitt.org, www.tamilinternetconference.org
செய்திக்குறிப்பிலிருந்து |
|
|
More
தெற்காசிய இதய மையம் அளிக்கும் சிவப்பு இரவு-2011 பாரதி தமிழ்ச் சங்கத்தின் இரண்டு விழாக்கள் உதவும் கரங்களுக்காக 'கும்கா' கனெக்டிகட் தமிழ்ச் சங்கம்: சித்திரைத் திருநாள்
|
|
|
|
|
|
|