Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | பொது | சிரிக்க சிந்திக்க | கவிதைப் பந்தல்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
பொது
தெரியுமா?: தமிழ் நாவாய்!
தென்கரோலினா கவர்னராக நிக்கி ஹேலி
சாண்டா கிளாரா சிறுவனின் சாதனை
சியாட்டில் தமிழ்ச் சங்க நிர்வாகிகள்
இணையத்தில் சுயம்வரம்
- தருமி|பிப்ரவரி 2011|
Share:
தமயந்திக்கு நளன்மேல் காதல். அவள்மீது மையல் கொண்ட தேவர்கள் எல்லோருமே நளனின் உருவத்தில் தமயந்தியின் சுயம்வரத்துக்கு வந்தார்கள் என்கிறது நளசரித்திரம். அதையும் மீறி எப்படிச் சரியான நளனின் கழுத்தில் மாலையிட்டாள் என்பது சுவையான கதை. அது கிடக்கட்டும்.

இப்போதெல்லாம் மிஸ் அல்லது மிஸ்டர் ரைட்டைக் கண்டுபிடிப்பது மிகவும் சிரம மான காரியமாக இருக்கிறது. அதிலும் அமெரிக்காவிலிருந்து அவசரமாகக் கிளம் பிப் போய், லீவு முடிவதற்குள் இந்திய நகரங்களிலும் அவற்றின் மாயச் சந்துகளிலும் வீடுகளைத் தேடியலைந்து சொஜ்ஜி பஜ்ஜி சாப்பிட்டுப் பெண்/மாப்பிள்ளை கிடைக் கிறாரோ இல்லையோ, அஜீரணமும் வாயுத் தொந்தரவும் நிறைய வந்துவிடுகிறது. வரன் தேடும் விஷயத்தில் மிக உதவியாக இருப் பவை திருமண ஆன்லைன் போர்ட்டல்கள்.

"மைசூர்ப்பா சாப்பிட வேண்டுமென்ப தற்காக கிருஷ்ணா ஸ்வீட்ஸையே விலைக்கு வாங்க வேண்டுமா?" என்றெல்லாம் வீராப்புப் பேசினாலும் கூட்டிக்கழித்துப் பார்த்தால் கல்யாணம் தேவையாகத்தான் இருக்கிறது, குறிப்பாக, இந்தியர்களுக்கு. இப்போதெல்லாம் வெற்றிலை பாக்குக் குதப்பிக்கொண்டு ஜரிகை வேட்டியும் கைநிறைய ஜாதகமுமாக வீடு தேடி வரும் தரகர்களையும் பார்க்க முடிவதில்லை. செய்தித்தாளில் வரி விளம்பரம் கொடுத்து விட்டு வந்து குவியும் தபாலைப் பிரிக்கவே சம்பளம் கொடுத்து ஆள் போட வேண்டிய தாகிவிடுகிறது. நாம் தேடுகிற மாதிரி வரன் நம்மோடு தொடர்பு கொள்ளும்போது அநேகமாகச் சீமந்தம் முடிந்துவிட்டிருக்கும். வீட்டுக்குள் உட்கார்ந்தபடியே வரன் தேடச் சிறந்த வழி ஆன்லைன் சுயம்வர வசதிதான்.

அமெரிக்காவில் உட்கார்ந்தபடியே துபாயிலோ, ஆஸ்திரேலியாவிலோ, மொரீஷஸிலோ இருக்கும் வரனைச் சரியாகப் பிடிக்க வேண்டுமென்றால் செய்தித்தாள் விளம்பரத்தால் முடியாது. ஒரே வழி ஆன்லைன்தான். அதனால்தானோ என்னமோ இண்டர்நெட் இணைப்பு மிக அதிகமாக இருக்கும் அமெரிக்காவிலும் கனடாவிலும் இருக்கும் இந்தியர்கள் ஆன் லைனில் ஜோடி தேடுவது தடாலடியாகப் பெருகியிருக்கிறது என்கிறது புள்ளிவிவரம்.

இந்தச் சேவைக்கென்று பல தளங்கள் உள்ளன. ஆனாலும் இதில் முன்னோடி என்று பாரத் மேட்ரிமொனியைச் சொல்லலாம். உலகளாவிய இந்தியர்களின் சுயம்வர மண்டபமாக, மற்றெல்லா தளங்களையும் விட அதிகம் பயன்படுத்தப்படுவதாக இருக்கும் திருமண தளம் இதுதானாம். "இந்தியனின் வாழ்க்கை யில கல்யாணம் எவ்வளவு முக்கியத்துவம் கொண்டது என்பதையும், இணையம் இன்றைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொண்டுவிட்டது என்பதையும் பார்த்தால் இணைய சுயம்வரத்தின் முக்கியத்துவம் புரியும். இது பாரம்பரியம் மற்றும் நவீனத் தின் சங்கமம்" என்கிறார் பாரத்மேட்ரி மொனியின் நிறுவனர் முருகவேல் ஜானகி ராமன்.
ஜானகிராமன் 1997ல் பொழுதுபோக் காகத்தான் இதைத் தொடங்கினார். அது உடனடி வெற்றி பெற்றது. ஒரு சுவையான விஷயம் என்னவென்றால், ஜானகிராமன் தனது மனைவி தீபாவை அடைந்ததே பாரத் மேட்ரிமொனி மூலமாகத்தான்! வெறும் 4000 உறுப்பினர்களுடன் தொடங்கிய இந்த வர்ச் சுவல் சுயம்வர மண்டபத்தில் இன்றைக்கு லட்சக்கணக்கானவர்களின் ஜாதகங்கள் பரிமாறப்படுகின்றன. அதில் 25 சதவிகிதம் பேர் அமெரிக்கா, கனடாவைச் சேர்ந்தவர் கள். இந்த தளம் உலக அளவில் 3250 ஆம் இடத்தையும், இந்திய அளவில் 251ஆம் இடத்தையும் பெற்றிருப்பதாகச் சொல்கிறது அலெக்ஸா.

துபாய், அமெரிக்கா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகள் தவிர இந்தியாவில் மட்டுமே 300 அலுவலகங்களைக் கொண் டுள்ளது பாரத் மேட்ரிமொனி. இதன் அமெரிக்க அலுவலகம் நியூ ஜெர்ஸியின் சௌத் பிரன்ஸ்விக்கில் உள்ளது. இதன் அலுவலகங்களில் பணி செய்வோர் 700 பேர் என்றாலும் இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது.

இதைப் பயன்படுத்துவோரின் வசதியைக் கருதித் தமிழ் தவிரத் தெலுங்கு, குஜராத்தி, பஞ்சாபி, ஹிந்தி, மராத்தி, பெங்காலி போன்ற மொழிகளில் 15 வட்டாரத் திருமணப் போர்ட்டல்களை நடத்தி வருகிறது. மொழி, மதம், சமூகம் என்ற அடிப்படைகளில் தேடுவதை எளிதாக்கி விட்டதனால் பாரத் மேட்ரி மொனி குடும்பத் திருமணப் போர்ட்டல்கள் எல்லாம் சேர்ந்து ஒரு மாதத்துக்கு ஒரு மில்லியன் பார்வைகளையும் தாண்டி விடுகிறது என்பதில் ஆச்சரியமில்லை.

"குறிப்பிட்ட ஒவ்வொரு பிரிவினரின் தேவையையும் எப்படி நாம் நிறைவு செய்கிறோம் என்பதில்தான் வெற்றியின் ரகசியம் இருக்கிறது" என்கிறார் ஃபரூக் ஷம்ஸுதீன். இவர் பாரத் மேட்ரிமொனியை நடத்தும் Consim நிறுவனத்தின் பன்னாட்டு வணிகப் பிரிவின் தலைவர். இந்த முயற்சி யின் ஒரு பகுதியாக 50 இந்தியச் சமுதாயங் களுக்கு மெய்நிகர் சுயம்வரங்கள் (Virtual Matrimony Meet) நடத்தப்படுகின்றன. ஒரு நிர்ணயிக்கப்பட்ட நாளிலும் நேரத்திலும் உலகெங்கிலுமுள்ள ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வலைவெளியில் சந்தித்து உரையாடி வரன்களைத் தேர்ந்தெடுக்க இந்தச் சுயம்வரம் உதவுகிறது.

மற்றுமொரு புதுமை அம்சமான 'Privilege Matrimony'. உயர்நிலைப் பதவிகளில் உள்ளவர்களின் வேறுபட்ட தேவைகளைப் புரிந்து கொண்டு, அவர்களது வாழ்க்கை முறைகேற்ற சுயம்வரத்துக்கு இது வாய்ப் பளிக்கிறது. தேச வரம்புகள் கடந்து வாழ்க்கையில் இணையக் கிடைத்த இந்த வலையகச் சுயம்வர மண்டபம், நளனுக்கும் தமயந்திக்கும் கிடைத்திராத வரப்பிரசாதம் என்பதில் சந்தேகமில்லை.

விளம்பதரதாரர் பகுதி

தருமி

*****


ICC உலகக் கோப்பை கிரிக்கெட்டை வழங்குகிறது BharatMatrimony.com

பிப்ரவரி 19 அன்று தொடங்கவிருக்கும் ICC உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை அமெரிக்காவில் டிவி மற்றும் இணையத்திலும், கனடாவில் இணையத்திலும் வழங்கும் ஸ்பான்சராகப் பொறுப்பேற்றுள்ளது பாரத் மேட்ரிமொனி திருமண தளம். 49 தகுதிச் சுற்றுப் போட்டிகளும் இதில் அடங்கும். அமெரிக்காவில் டிஷ் டிவி மற்றும் டிரெக்ட் டிவி வலைத்தொகுப்புகளில் Pay per View வழியில் இந்தப் போட்டிகளைக் காண முடியும். ஆன்லைனிலும் பார்க்கலாம்.

செய்திக் குறிப்பிலிருந்து
More

தெரியுமா?: தமிழ் நாவாய்!
தென்கரோலினா கவர்னராக நிக்கி ஹேலி
சாண்டா கிளாரா சிறுவனின் சாதனை
சியாட்டில் தமிழ்ச் சங்க நிர்வாகிகள்
Share: 




© Copyright 2020 Tamilonline