Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பொது | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | ஹரிமொழி | சிரிக்க சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சமயம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
சௌம்யா ராமநாதனின் 'சமர்ப்பணம்'
சிகாகோ தமிழ்ச் சங்கம்: குழந்தைகள் தினவிழா
அரோராவில் வறியோர்க்கு உணவு
ஆல்ஃபரெட்டாவில் குழந்தைகள் தின விழா...
லிவர்மோர் சிவ-விஷ்ணு ஆலயத்தில் கந்த சஷ்டி
அட்லாண்டா தமிழ்ப் பள்ளியில் தீபாவளி விழா
பாரதி தமிழ்ச் சங்கம் வழங்கிய க்ரியாவின் 'தனிமை'
'பெப்பெரப்பே' வழங்கிய 'மாங்கல்யம் வம்பு தானேனா'
ஆன்செம்பிள் ஆஃப் ராகாஸ் கலைப் பள்ளியின் 'அபிநவ கானாம்ருதம்'
நவராத்திரி கர்நாடக இசைக் கச்சேரி
'ட்ரினிடி' இசைப்பள்ளி ஆண்டு விழா
மாயா ராமச்சந்திரனின் 'சிவனே மாயா'
- ராஜலக்ஷ்மி ஸ்ரீநிவாஸன்|டிசம்பர் 2010|
Share:
செப்டம்பர் 5, 2010 அன்று குமாரி மாயா ராமச்சந்திரன் கலிபோர்னியாவில் உள்ள பாலோ ஆல்டோ கபர்லி தியேடரில் 'சிவனே மாயா' என்னும் நடன நிகழ்ச்சியை அளித்தார். இவர் ஸ்ரீக்ருபா நடனப் பள்ளியின் குரு விஷால் ரமணி அவர்களின் மாணவி.

வாசந்தி ராகப் புஷ்பாஞ்சலியுடன் விறுவிறுப்பாகத் தொடங்கிய நிகழ்ச்சி, கம்பீரமான கணேச துதி, ஷண்முகப்ரியா ராக முருகன் துதி என்று ராஜநடை போட்டது. அடுத்து வந்த சிவபெருமான் குறித்த 'ஆனந்த நடமாடுவார் தில்லை' ரசிகர்களைத் தில்லையம்பதிக்கே அழைத்துச் சென்றது. நிகழ்ச்சிக்குச் சிகரமாக அமைந்த சிவரஞ்சனி ராக வர்ணம், தேவியின் லீலைகளைச் சித்திரித்ததுடன் அவளது கருணையையும் அபயமளிக்கும் குணத்தையும் அபிநயத்தில் வெளிப்படுத்தியது அற்புதம்.

நிறைவாக ஆடிய யமன் கல்யாணித் தில்லானா முத்திரைகளிலும் பாத அடித்திறனிலும் உள்ள அநாயாசமான லாகவத்தை உணர்த்தியது. குரு விஷால் ரமணியின் மேற்பார்வையில், திரு. வாசுதேவன் கேசவலு நட்டுவாங்கம், திருமதி. ஸ்வேதா ப்ரஸாத் வாய்ப்பாட்டு, திரு. தனஞ்ஜயன் மிருதங்கம், திரு.வீரமணி வயலினுடன் நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது.
தமிழகத்தின் ஒரு சிறிய கிராமத்தில் இருக்கும் ஒரு புராதன ஆலயத்தைப் புனருத்தாரணம் செய்யவும், அங்கு வாழும் எளிய மக்களின் மன, அறிவு, ஆன்மீக வளர்ச்சிக்காகவும் பயன்படும் முறையில் நிதி திரட்டும் வண்ணம் இந்த நிகழ்ச்சியை மாயா வழங்கினார்.

முனைவர் ராஜலக்ஷ்மி ஸ்ரீநிவாஸன்,
ஃப்ரீமாண்ட், கலி.
More

சௌம்யா ராமநாதனின் 'சமர்ப்பணம்'
சிகாகோ தமிழ்ச் சங்கம்: குழந்தைகள் தினவிழா
அரோராவில் வறியோர்க்கு உணவு
ஆல்ஃபரெட்டாவில் குழந்தைகள் தின விழா...
லிவர்மோர் சிவ-விஷ்ணு ஆலயத்தில் கந்த சஷ்டி
அட்லாண்டா தமிழ்ப் பள்ளியில் தீபாவளி விழா
பாரதி தமிழ்ச் சங்கம் வழங்கிய க்ரியாவின் 'தனிமை'
'பெப்பெரப்பே' வழங்கிய 'மாங்கல்யம் வம்பு தானேனா'
ஆன்செம்பிள் ஆஃப் ராகாஸ் கலைப் பள்ளியின் 'அபிநவ கானாம்ருதம்'
நவராத்திரி கர்நாடக இசைக் கச்சேரி
'ட்ரினிடி' இசைப்பள்ளி ஆண்டு விழா
Share: 




© Copyright 2020 Tamilonline