Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பொது | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | எங்கள் வீட்டில் | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சமயம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
கனெக்டிகட் தமிழ்ச் சங்கம் தீபாவளி நிகழ்ச்சி
NETS குழந்தைகள் தின விழா
மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி வருகை
லிவர்மோர் சிவ-விஷ்ணு ஆலயத்தில் ஐயப்ப மண்டல பூஜை, மகர விளக்கு
- பிரசாத் ராமகிருஷ்ணன்|நவம்பர் 2010|
Share:
சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியிலுள்ள லிவர்மோர் ஸ்ரீ சிவ விஷ்ணு கோவிலில் நவம்பர் 13, 2010 முதல் ஜனவரி 16, 2011 வரை ஸ்ரீ ஐயப்ப ஸ்வாமிக்கு மகர விளக்கு மற்றும் மண்டல பூஜை நிகழ்வுகள் நடைபெற உள்ளன. மண்டல பூஜை நவம்பர் 13, 2010 அன்று மாலை 4:30 மணிக்குத் தொடங்கும். இந்த நாளன்று மண்டல விரதமிருந்து லிவர்மோர் ஆலயத்தில் இருமுடி பூஜை செய்து சபரிமலைக்கு யாத்திரை செய்ய விரும்பும் பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதத்தைத் துவங்குவர். அன்று சங்கல்பம், அபிஷேகம், அர்ச்சனை, மாலை அணிவித்தல், பஜனை, செண்டையுடன் தாலப்பொலி, மங்கள ஆரத்தி, அன்னதானம் ஆகியவை நடைபெறும்.

அதற்குப் பின் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 5:00 மணி அளவில் (நவம்பர் 20, 27; டிசம்பர் 4, 11, 18) ஐயப்ப சஹஸ்ரநாமம், வாராந்திர பஜனை, தீபாராதனை ஆகியவை நடைபெறும். அன்று மண்டல விரதம் துவங்க மற்றொரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. டிசம்பர் 18 அன்று சிறுவர்கள் துளசி மாலை அணிந்து விரதத்தை துவங்கலாம்.

டிசம்பர் 26 அன்று மண்டல விரத வழிபாடு நிறைவு பெறும். காலை 9:00 மணிக்கு, இருமுடி கட்டும் நிகழ்வுகளும் அதைத் தொடர்ந்து சங்கல்பம், அபிஷேகம், அர்ச்சனை, பஜனை, மங்கள ஆரத்தி, அன்னதானம் நடைபெறும்.

ஐயப்ப மகர சங்கராந்தி பூஜை ஜனவரி 16 அன்று மாலை 4:30 மணிக்குத் தொடங்கும். இந்த நாளன்றும் அபிஷேகம், அர்ச்சனை, பஜனை, செண்டையுடன் தாலப்பொலி, மங்கள ஆரத்தி, அன்னதானம் நடைபெறும். அன்று சபரிமலையிலிருந்து நெய் அபிஷேக பிரசாதம், விபூதி பிரசாதம் பக்தர்களுக்கு அளிக்கப்படும். எல்லா நிகழ்ச்சிகளுக்கும் பக்தர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.
சென்ற ஆண்டின் நிகழ்வுகளைக் காண: pramki.blogspot.com

மாலை அணிந்து விரதத்தைத் துவங்க விரும்புவோர் கீழ்க்கண்ட நபர்களை அணுகவும்:
பிரசாத் ராமகிருஷ்ணன் prasad.ramki@gmail.com - 408.705.8172
ரவி தேவராஜ் - ravi.devaraj@gmail.com - 650.302.3612
சுதாகர் தீவி - sudhakardeevi@gmail.com - 925.518.5421
மனோஜ் எம்பிரான்திரி - kapish@gmail.com
இணையதளம் - www.ayyappasamaaj.org
மின்னஞ்சல் குழு - groups.yahoo.com

பிரசாத் ராமகிருஷ்ணன்,
கலிஃபோர்னியா
More

கனெக்டிகட் தமிழ்ச் சங்கம் தீபாவளி நிகழ்ச்சி
NETS குழந்தைகள் தின விழா
மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி வருகை
Share: 




© Copyright 2020 Tamilonline