கொள்ளு குருமா கொள்ளு இட்லிப் பொடி
|
|
|
|
|
கொள்ளு என்பது குதிரையின் உணவு என்கிற எண்ணம் பரவலாக இருக்கிறது. கொழுப்பைக் கரைத்து உடலைத் தளதளவென்று ஆக்கும் நல்ல தானியம் கொள்ளு. சரி அதை என்ன செய்து சாப்பிடலாம்? இதோ சில வழிகள்:
கொள்ளு இட்லி
தேவையான பொருட்கள் இட்லி அரிசி - 4 கிண்ணம் கொள்ளு - 1 கிண்ணம் உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை: கொள்ளை குறைந்தது எட்டு மணி நேரமாவது ஊற வைக்க வேண்டும். அரைப்பதற்கு மூன்று மணி நேரம் முன்பு அரிசியை ஊற வைத்தால் போதுமானது. இரண்டையும் தனித்தனியே அரைத்துக் கொள்ளவும். (கொள்ளு நன்றாக உளுந்து போல் உப்பி வரும்) அரைத்த இரண்டு மாவையும் தேவையான உப்பு கோட்டுக் கரைத்து வைக்கவும். எட்டு மணி நேரத்திற்குப் பின்பு இட்லி ஊற்றவும். தொட்டுக்கொள்ள காரமாகச் சட்னி செய்யவும்.
குறிப்பு: கொள்ளு அரைக்கும் போது அதிகமாய் நீர் சேர்க்க வேண்டாம். கொள்ளு நன்றாக அரைபட நேரம் ஆகும். மிக்ஸியில் அரைப்பவர்கள் நான்கு கிண்ணம் அரிசிக்கு ஒன்றேகால் கிண்ணம் கொள்ளு உபயோகிக்க வேண்டும். |
|
நித்யா பாலாஜி, பிரிட்ஜ்வாட்டர், நியூ ஜெர்சி |
|
|
More
கொள்ளு குருமா கொள்ளு இட்லிப் பொடி
|
|
|
|
|
|
|