Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நலம்வாழ | முன்னோட்டம் | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி | அஞ்சலி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | கவிதை பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா-கனடா விஜயம்
தமிழ்நாடு அறக்கட்டளை - அட்லாண்டா மாநகரத் தமிழ் சங்கம் வழங்கும் இன்னிசை நிகழ்ச்சி
பாட்டும் பரதமும் இணையும் 'முத்ராஸ்'
நெய்வேலி சந்தான கோபாலனுக்கு விழா
'அபிநயா'வின் 30வது ஆண்டுவிழா
தமிழ் இலக்கியத் தோட்டம்
- |ஜூன் 2010|
Share:
கனடிய தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருது வழங்கும் விழா இந்த வருடம் இரு பிரிவுகளாக கொண்டாடப்படுகிறது. இயல் விருது விழா சென்னையிலும் மற்றைய விருதுகளுக்கான விழா டொரண்டோ பல்கலைக்கழக மண்டபத்திலும் நடைபெறும்.

சென்னை விழா
இடம்: GRT Grand Hotel, 120 Thyagarayar Road, T.Nagar
தேதி: ஞாயிற்றுக்கிழமை, 4 ஜூலை 2010
நேரம்: மாலை 5.30 மணி

இயல்விருது பெறுநர்கள்:

கோவை ஞானி
கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழிலக்கியத்தில் தீவிர சிந்தனையாளராகவும், கோட்பாட்டாளராகவும், திறனாய்வாளராகவும் இயங்கி வருகிறார். தமிழின் நவீன இலக்கியங்களை மார்க்ஸிய நோக்கில் ஆராய்ந்தவர்களில் முதன்மையானவர். நுட்பமான இலக்கிய உணர்வும் பேரிலக்கியங்களைத் திறந்த மனதுடன் அணுகும் பண்பும் கொண்டவர். 24 திறனாய்வு நூல்களும் 12 தொகுப்பு நூல்களும், நான்கு கட்டுரைத் தொகுதிகளும், இரண்டு கவிதை நூல்களும் எழுதியிருக்கும் ஞானி 'நிகழ்' என்ற சிற்றிதழைப் பல ஆண்டுகளாக நடத்தியவர். இவருக்கு 'விளக்கு விருது', 'தமிழ் தேசியச் செம்மல் விருது', 'தமிழ் தேசியத் திறனாய்வு விருது', 'பாரதி விருது' ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

ஐராவதம் மகாதேவன்
சென்னை பல்கலைக் கழகத்தில் பயின்ற இவர் 33 வருடங்கள் இந்திய ஆட்சிப் பணியிலும், நான்கு வருடங்கள் 'தினமணி' ஆசிரியராகவும் கடமையாற்றியவர். தமிழ் எழுத்துக்களின் தோற்றமும் வளர்ச்சியும் குறித்து இவர் நடத்திய நீண்டகால ஆராய்ச்சிகளுக்காக சர்வதேச அளவில் புகழடைந்தார். கல்வெட்டு ஆராய்ச்சிகளில் இவரது உழைப்பு தொல்தமிழ் குறித்தும், பண்பாடு வரலாறு குறித்தும் தீர்க்கமான முடிவுகளை அடைய உதவியிருக்கிறது. பிராமி எழுத்துமுறை தமிழகத்தில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் பரவியது என்பதையும், அந்த நூற்றாண்டிலேயே எழுத்தறிவு தோன்றியது என்பதையும் ஆராய்ச்சி மூலம் நிறுவியிருக்கிறார். இவருக்கு இந்திய அரசு 2009ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதை வழங்கியது.
பேரா. செல்வா கனகநாயகம், பேரா. வீ. அரசு, ஜெயமோகன், பேரா. தமிழவன், ஆ.இரா. வேங்கடாசலபதி, கவிஞர் சுகுமாரன், கலாநிதி நா. சுப்பிரமணியன் ஆகியோர் சென்னையில் நடத்தப்படும் விழாவில் பங்கேற்பர்.

டொரண்டோ விழா
இடம்: சீலி மண்டபம், டொரண்டோ பல்கலைக்கழகம்
தேதி: சனிக்கிழமை, 17 ஜூலை 2010
நேரம்: மாலை 6.00 மணி

இதில் சிறப்புப் பேச்சாளராக பேரா. சாஷ எபலிங் (Sascha Ebeling), சிகாகோ பல்கலைக் கழகம், கலந்துகொள்கிறார்.

செய்திக்குறிப்பிலிருந்து
More

மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா-கனடா விஜயம்
தமிழ்நாடு அறக்கட்டளை - அட்லாண்டா மாநகரத் தமிழ் சங்கம் வழங்கும் இன்னிசை நிகழ்ச்சி
பாட்டும் பரதமும் இணையும் 'முத்ராஸ்'
நெய்வேலி சந்தான கோபாலனுக்கு விழா
'அபிநயா'வின் 30வது ஆண்டுவிழா
Share: 




© Copyright 2020 Tamilonline