மாறிய கூட்டணி! சூடுபிடிக்கும் தேர்தல் நான்குமுனைப் போட்டி!
|
|
கூட்டணிதான் ஒரே வழி |
|
- கேடிஸ்ரீ|ஏப்ரல் 2006| |
|
|
|
சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மத்திய அமைச்சருமான இளங்கோவன் 'கூட்டணி ஆட்சி' என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்தார். இது தி.மு.க. தலைமைக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. சோனியா காந்தி தலையிட்டு இளங்கோவனின் 'கூட்டணி ஆட்சி' கோஷத்தைக் கைவிட வைத்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு தாரளமாக இடம் ஓதுக்கி இளங்கோவனின் கூட்டணி ஆட்சி ஆசை யைத் துளிர்க்கச் செய்திருக்கிறார் கருணாநிதி.
ஆரம்பம் முதலே ஒவ்வொரு கூட்டணிக் கட்சியும் தனக்கு அதிகத் தொகுதிகள் தரவேண்டும் என்று கோரிப் பெருத்த தலைவலியை ஏற்படுத்தியது. ஒவ்வொரு கட்சிக்கும் அவர்கள் கேட்கும் இடங்களை ஒதுக்கினால் 234 தொகுதிகள் போதாது என்று கருணாநிதி ஒரு கட்டத்தில் வெளிப்படையாகவே கூறினார்.
ம.தி.மு.க.வின் வெளியேற்றத்தை அடுத்து தி.மு.க. தலைமை கூட்டணிக்காகச் சில தியாகங்களைச் செய்ய முன்வந்தது. ஆட்சி அமைப்பதற்கு 118 இடங்களைக் கைப்பற்ற வேண்டிய நிலையில் தி.மு.க. 129 இடங் களில் மட்டுமே போட்டியிட முடிவுசெய்து மீதித் தொகுதிகளைக் கூட்டணிக் கட்சி களுக்கு விட்டுக் கொடுத்துவிட்டது. |
|
தமிழகத்தில் எதிர்ப்பு அல்லது ஆதரவு அலை இல்லாத நிலையில் வெற்றி இலக்கான 118-ஐத் தொடுவது சிரம மானதாகவே கருதப்படுகிறது. கூட்டணி ஆட்சிக்கு நாங்கள் தயாராகிவிட்டோம் என்று தி.மு.க. சொல்லாமல் சொல்வது காலத்தின் கட்டாயமாகக் கருதப்பட்டாலும் இது ஆரோக்கியமான தொடக்கம் என்று கூடக் கூறலாம்.
தொகுப்பு: கேடிஸ்ரீ |
|
|
More
மாறிய கூட்டணி! சூடுபிடிக்கும் தேர்தல் நான்குமுனைப் போட்டி!
|
|
|
|
|
|
|