Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எனக்கு பிடிச்சது | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கவிதை பந்தல் | சிரிக்க, சிந்திக்க
Tamil Unicode / English Search
சிறுகதை
விமரிசனம்
தவிப்பு
அன்பாகக் கொடுத்த புடவை
- தங்கம் ராமசாமி|மார்ச் 2010||(1 Comment)
Share:
படுக்கையில் புரண்டு படுத்தாள் சுமதி. "என்ன தூங்கலையா?'' ரகு சுமதியைக் கேட்டான்.

"ஆமாம். தூக்கம் எப்படி வரும்? வரவர உங்க அக்கா குணம், செய்யறதெல்லாம் எரிச்சலா வருது?"

"ஓ மை டியர் சுமதி, இப்ப என்ன என் அக்கா செய்துட்டா? என்னமோ புதுசா ஆரம்பிக்கறே? பேசாம தூங்கு."

"என்னவா உங்க அக்கா பெரிசா இந்தியா போயிட்டு நிறையப் புடவைகள் வாங்கிட்டு வந்திருக்காங்க இல்லே.. எல்லாருக்கும் நல்ல நல்ல டிசைன் கலர்னு கொடுத்தும் எனக்கு மட்டும் அப்படி மட்டமா அழுது வடியற கலர்ல கொடுக்கணுமா என்ன? அப்படி நான் என்ன மட்டமா போயிட்டேன், இளிச்சவாயா நினைக்கறாங்க. ஒங்க தங்கைகள் ரெண்டு பேருக்கும் நல்ல கலரா புடவை கொடுத்திருக்காங்க. இதுல வேற பேச்சு பிரமாதமா இருக்கு. "சுமதி இந்தப் புடவை ரொம்ப அபூர்வமான கலர் எத்தனை கடை ஏறி கால்கடுக்க செலக்சன் பண்ணினேன் தெரியுமா?" இப்படி ஒரு லெக்சர், நான் என்ன புடவை இல்லைன்னு இவகிட்ட கேட்டேனா? அவ்வளவு சீப்பா போயிட்டேனா?"

''ஐயோ இப்படி நீ சில்லி மேட்டருக்கெல்லாம் குத்தம் கண்டு பிடிக்கறது சரியில்லை. இந்த அமெரிக்காவில் யார் புடவை கட்டிக்கறாங்க? ஏன் நீயேகூட பார்ட்டி கோயில்னு போனாத்தான் சாரி கட்டிக்கறே? ஏதோ ஒரு பிரியத்துக்காக இந்தியாவில் வாங்கிண்டு வந்தா; அவ கண்ணுக்குப் பிடிச்சி இருக்கலாம். நன்னாயிருக்குன்னு பெருந்தன்மையா சொல்லிட்டுப் போயேன் சும்மா குறை சொல்லிண்டு."

"அடேயப்பா... ஒங்க மனுசாள ஒண்ணு சொல்லிட்டா போறும் வரிஞ்சு கட்டிட்டுப் பேசி என் வாயை அடைச்சிடுங்க. இதே நான் இந்தியாவிலேர்ந்து வாங்கிட்டு வர டிரஸ், புடவை எல்லாம் பார்த்தா உடனே எனக்கு இது வேணும்னு தூக்கிக்கச் தெரியறது. எனக்குக் கொடுக்கணும்னா மனசே வராது அல்ப குணம்" பொரிந்து தள்ளினாள்.

சுமதிக்குப் பிடிவாத குணம். ஒன்று பிடிக்காத விஷயமென்றால் குத்திக் குத்திப் பேசிக்கொண்டே இருப்பாள். ரகுவும் நன்றாகத் தெரிந்து வைத்திருந்ததால் மேற்கொண்டு பேசாமல் 'உன் இஷ்டம்' என்று விட்டு விட்டான்.
"நான்சென்ஸ் சும்மா பிறத்தியார் பேர்ல குத்தம் சொல்ற குணத்தை விடு. தூங்கு பேசாம" வெடுக்கென்று கூறினான் ரகு.

தினமும் இதேபோன்று புடவைப் பேச்சும் ஒரு சிறு பாரத யுத்தம் நடந்து முடிந்து தூங்குவதும் வழக்கமாகிவிட்டது.

அன்று காலையில் எழுந்ததும் "இதோ பாருங்க நவராத்திரி சமயம் நம்ப துர்கா மந்திர்ல அம்பாளுக்கு விதவிதமா அலங்காரம் செய்யறாங்க. நான் ஒங்க அக்கா அருமையா கொடுத்த புடவையை துர்கைக்கு சாத்திடப் போறேன்" என்றாள் ரகுவின் பதிலை எதிர்பார்க்காமல்.

"என்னது துர்க்கைக்குச் சாத்தறயா? பாவம் அக்காவுக்குத் தெரிஞ்சா மனசு சங்கடப்படுவா. நீ செய்யறது நல்லவேயில்லை. ஏதோ ஆசையாய் வாங்கிட்டு வந்து கொடுத்திருக்கா. பிடிச்சிருக்கோ பிடிக்கலையோ அவ மனசு திருப்திக்காகவாவது கட்டிண்டு காண்பிக்கறதுதான் மேனர்ஸ். அப்புறம் உன் இஷ்டம்."

"உக்கும் ஆசையா பெரிய பனாரஸ் புடவை வாங்கிட்டு வந்திருக்காங்க. போதுமே நான் அம்மனுக்கு சாத்தத்தான் போறேன்" என்று தீர்மானமாக கூறிவிட்டுப் புடவையுடன் கோயிலுக்குப் போனாள்.

சுமதிக்குப் பிடிவாத குணம். ஒன்று பிடிக்காத விஷயமென்றால் குத்திக் குத்திப் பேசிக்கொண்டே இருப்பாள். ரகுவும் நன்றாகத் தெரிந்து வைத்திருந்ததால் மேற்கொண்டு பேசாமல் 'உன் இஷ்டம்' என்று வருத்தத்துடன் கிளம்பிச் சென்றான்.

கோயிலுக்குப் போய் அர்ச்சகரிடம் புடவையைக் கொடுத்து விட்டு வந்தாள் சுமதி.

ஒருமாதம் ஆகியிருக்கும். சுமதியின் அண்ணன் சங்கர் கனெக்டிகட்டிலிருந்து போன் பண்ணினான்.

"ஹை சுமதி! நான்தான் சங்கர். ஒருவாரம் ஆபீஸ் வேலையாய் நியூஜெர்சி வரவேண்டியிருக்கு. அண்ணியும் என்கூட வருவாள். அநேகமாய் தீபாவளிக்கு உங்ககூட இருக்கலாம்னு நினைக்கிறேன்" என்று கூறினான்.

சுமதிக்கு சந்தோஷம் நிலைகொள்ளவில்லை. மாலையில் ரகு வந்ததும் சங்கர் வரப்போவதாகச் சொல்லி ஆனந்தப்பட்டாள்.

"வெரிகுட் சுமதி. இந்த வருஷம் தீபாவளி வெரி கிராண்ட்தான் போ. இனிமே உன்னைக் கையில பிடிக்கமுடியாது" எனக் கூறவும் "இருக்காதா எங்க அண்ணனைப் பார்த்தே ஒன்றரை வருஷமாச்சே. அவனுக்குப் பிடித்த பாதுஷா, ஜாங்கிரி எல்லாம் ஸ்வீட் ஸ்டால்ல ஆர்டர் கொடுத்துடலாம். அப்படியே அவங்களுக்கு டிரஸ் எடுத்துவிடலாம்" என்றாள்.
"அடேயப்பா பீடிகை எல்லாம் பலமா இருக்கே. இன்றைக்கே தீபாவளி வந்துட்ட மாதிரி இல்ல பூப்பூவாச் சிரிக்கறே. தீபாவளி கலகலதான். பை த பை உன் அண்ணனும் உனக்கு ஏதாவது வாங்கி.."

"பாவம் அவன் வரதே எனக்கு மகிழ்ச்சி. வாங்கிட்டு வந்தாத்தானா? சும்மா இருங்க"

"அப்பப்பா. இந்த பொம்பளங்களுக்குப் பிறந்த வீட்டு மனிதர்கள்னா எப்படியெல்லாம் பேசத் தோணறது.." மனசுக்குள் நினைத்துக் கொண்டான்.

ஒரு வாரத்தில் சங்கரும் மனைவி கீதாவும் வந்து சேர்ந்தார்கள். அகமும் முகமும் மலர அவர்களை வரவேற்றாள் சுமதி.

"நீ வரேன்னு கேட்டதிலேர்ந்து உன் தங்கை கால் தரையில் படாம ஒரே குஷிதான்."

"போதும் சும்மா கிண்டலடிக்க வேண்டாம்."

நாத்தனார் கொடுத்த புடவை, துர்க்கைக்குத் தான் சாத்தியது, திரும்பித் தன்னிடமே வந்துவிட்டதைப் பார்த்து வாயடைத்து நின்றாள் சுமதி.
"சுமதி இந்த நியூஜெர்சியில கோயில் எல்லாம் என்னம்மா இருக்கு. உங்க அண்ணிதான் கோயில் பைத்தியமாச்சே. துர்கை கோயில் போயிட்டுப் போகணும்னு ரொம்பச் சொன்னா. அப்படியே காரைப் பார்க் பண்ணிட்டு உள்ளே தரிசனம் செய்தோம். அடடா என்ன அலங்காரம் அழகு. துர்க்கை அப்படியே ஜொலிக்கறா போ."

"இங்கே இவர்கிட்ட சொல்லு. கோயில் பக்கமே ஒரு நாள்கூடப் போறதில்லை.. ஆபீசிற்குப் போயிட்டு வராரே அதுவே பெரிசு. சரி காபி சாப்பிடுங்க."

"பாவம் அவருக்கு டைம் கிடைக்கலை. அது இருக்கட்டும். தீபாவளிக்கு உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இந்தா. ஒரு புடவை ஏதோ ஏழையோட அன்பளிப்பு" கையில் ஒரு கவரை நீட்டினான் சிரித்தவாறு.

"எதுக்கு இதெல்லாம் அண்ணா. நீங்க வந்ததே எனக்குப் பெரிய சந்தோஷம். புடவை என்ன அன்பும் பாசமும்தான் முக்கியம்.

"சங்கர் இதென்ன டூ ஃபார்மலா இருக்கே! எனக்குக் கஷ்டமாயிருக்கு" என்றான் ரகு.

கண்களில் ஆவல் கொப்பளிக்கப் புடவையை வெளியில் எடுத்தாள் சுமதி.

"எப்படி இருக்கு, பிடிச்சிருக்கா? அம்பாளுக்குச் சாத்தின புடவை. ரொம்ப விசேஷமாச்சே! அங்கே விலைக்குப் போட்டிருந்தாங்க. அண்ணிக்கும் எனக்கும் ரொம்பப் பிடிச்சிருந்தது. பார்டரும், உடலும் கண்ணைப் பறிச்சிடுத்து உனக்குப் பொருத்தமாக இருக்கும். என்ன பதிலே காணோம்" பேசிக் கொண்டே போகப் போக...

நாத்தனார் கொடுத்த புடவை, துர்க்கைக்குத் தான் சாத்தியது, திரும்பித் தன்னிடமே வந்துவிட்டதைப் பார்த்து வாயடைத்து நின்றாள் சுமதி. ரகுவின் முகத்தில் ஒரு புன்னகை இழையோடியது.

அண்ணன் கொடுத்த அதிர்ச்சிப் பரிசைப் பாராட்டுவதா, தான் செய்த காரியத்தை வெளியே கூறுவதா! ஒன்றும் புரியாமல் விழித்தாள் சுமதி.

தங்கம் ராமசாமி
More

விமரிசனம்
தவிப்பு
Share: 




© Copyright 2020 Tamilonline