மிசௌரி தமிழ் சங்கம் பொங்கல் விழா விரிகுடாப் பகுதியில் 'சூழல் தினம்' சான் டியேகோ தமிழ்ச்சங்கம் பொங்கல் விழா மலிபு கோவிலில் தியாகராஜ ஆராதனை இளையராகம் குழுவினரின் 'சங்கீத மேகம்'
  | 
											
											
	  | 
											
												
                                                    
                                                    
                                                        
	                                                        | சான் டியேகோ மாநிலப் பல்கலைக் கழகத்தின் கோடைகாலக் கல்வித் திட்டம் | 
	                                                            | 
                                                         
                                                        
	                                                        - பேராசிரியர் மாதவன், கோ. ஜெயபாண்டியன் | ஜனவரி 2010 |![]()  | 
	                                                         | 
                                                         
                                                        
	                                                        | 
                                                                 
                                                                
                                                                
	                                                         | 
                                                         
                                                     
                                                    
												 | 
                                            
                                            
	  | 
											
											
												சான் டியேகோ மாநிலப் பல்கலைக் கழகத்துடன் (SDSU) PSG கல்வி நிறுவனங்கள் (PSG Institutions) இணைந்து கோடைக் காலக் கல்வித் திட்டம் ஒன்றை வழங்குகின்றனர். பொருளியல் மற்றும் ஆசிய ஆய்வுகள் துறையில் ஓய்வுபெற்ற பேராசிரியர்  M.C மாதவன் அவர்கள் கருத்துருவாக்கிய இத்திட்டம் அவராலேயே நடத்தப்படும்.
  சான் டியேகோ மாநிலப் பல்கலைக்கழக மேதகர் நான்ஸி மார்லின் தலைமையில் ஒரு குழு 2009 ஆண்டு நவம்பர் மாதம் கோயம்புத்தூர் சென்றுவந்ததன் விளைவாக இத்திட்டம் உருவாகியுள்ளது. முதல்வர் பால் வாங், பேராசிரியர் மாதவன், பேராசிரியர் அல் சுவீட்லர் ஆகியோரும் அக்குழுவில் இடம் பெற்றிருந்தனர். கோயம்புத்தூரிலுள்ள PSG மற்றும் GRG கல்வி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்திய பிறகு, அந்தக் கல்வி நிறுவனங்களுடன் நீண்டகால உறவை நிறுவுவதற்கான உடன்பாட்டுக் குறிப்புரைகளில் SDSU கையொப்பம் இட்டிருக்கிறது. இவ்வாறான உறவுகள் கலை, எழுத்து, உடல்நலம், மனிதச்சேவைகள், தொழில்நுட்பம் ஆகிய துறைகளுக்கானவை.
  'இந்தியா நேற்றும் இன்றும் நாளையும்' என்ற தலைப்பிலான கோடைக்காலக் கல்வித்திட்டம் 2010 மே 31 முதல் ஜூன் 14 வரை கோயம்புத்தூரில் நடைபெறுவதுடன், ஊட்டி, பங்களூர், மைசூர், பேலூர், ஹளேபீடு, சென்னை, மகாபலிபுரம், பாண்டிச்சேரி ஆகிய இடங்களுக்கும், இன்ஃபோஸிஸ் வளாகம், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், இந்திரா காந்தி அணு ஆய்வு மையம், ஐ.ஐ.டி, சென்னை ஆய்வு மற்றும் உருவாக்கம் முதலிய இடங்களுக்கும் 10 நாள் கல்விச் சுற்றுலாவும் மேற்கொள்ளப்படும்.
  இந்திய நாகரிகமும் கலாசாரமும், இந்திய அகழாய்வு, காலந்தோறுமான இந்திய வரலாறு, இந்திய சமுதாயம், சமுதாய மாற்றங்கள், நிலையான பொருளியல் முன்னேற்றங்கள், வயல்வெளிப் பொருளியல், தொழிலக மற்றும் உள்கட்டமைப்பு உருவாக்கம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய கருத்துக்கள் விரிவுரைகளிலும் சுற்றுலாக்களிலும் இடம்பெறுவன. தலையாய கல்வியாளர்களும், பெரும் நிறுவனங்களில் கொள்கை உருவாக்குவோரும், அவற்றின் நிர்வாக இயக்குனர்களும் பல்வேறு தலைப்புகளிலும் விரிவுரையளிப்பர். மாணவர்கள் முதுமலை புலி பாதுகாப்பகத்துக்கும், நீலகிரி தோடர் இடங்களுக்கும் சென்று வருவார்கள். 
 
   |  | விருப்பமுள்ளோர் அன்றாட யோகாசனம் மற்றும் மன அமைதிப் பயிற்சியிலும், நடனக்கலை வகுப்புகளிலும் பங்கேற்கலாம். |    |  
   விருப்பமுள்ளோர் அன்றாட யோகாசனம் மற்றும் மன அமைதிப் பயிற்சியிலும், நடனக்கலை வகுப்புகளிலும் பங்கேற்கலாம். மாணவர்கள் கோயம்புத்தூரில் இருக்கும்போது PSG கல்விநிலையங்களின் விருந்தினர்களாகக் குளியலறை கொண்ட தனித்தனி அறைகளில் தங்குவார்கள். பல நண்பர்கள் இரவுணவும் அளிப்பார்கள். விரிவுரைகளுக்கு இந்திய மாணவர்களையும் அனுமதிக்க நாங்கள் திட்டமிட்டிருப்பதால் அமெரிக்க மாணவர்கள் இந்தியாவை மேலும் புரிந்துகொள்ள வாய்ப்புகள் கிடைக்கும். | 
											
											
												| 
 | 
											
											
											
												சான் டியேகோ மாநிலப் பல்கலைக் கழகத்துக்கு மாற்றிக்கொள்ளக்கூடிய மூன்று மேல்நிலை அலகுகளுக்கான (General Studies 450) கல்விக்கட்டணம் உட்பட இத் திட்டத்துக்கு ஆகும் செலவு $1,690. லாஸ் ஏஞ்சலஸிலிருந்து கோயம்புத்தூருக்குச் சென்று திரும்ப விமானப் போக்குவரத்துச் செலவு சுமார் $1,140 ஆகலாம். இத்திட்டத்துக்கான விண்ணப்பப் படிவங்களை திருமதி. மாரன் காஸ்டனேட்டா (Maren Castaneta) என்பவருக்கு mcastane@mail.sdsu.edu என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம். இவரை 619 594 0931 என்ற எண்ணிலும் அழைத்துப் பேசலாம். தேவையானால், பேராசிரியர் மாதவன் அவர்களை madhavan@mail.sdsu.edu என்ற முகவரியில் அணுகலாம்.
  மாணவர்கள் பெரும்பாலும் மே 26, 2010 அன்று லாஸ் ஏஞ்சலஸிலிருந்து கிளம்பி, ஜூன் 24 அன்று லாஸ் ஏஞ்சலஸுக்குத் திரும்புவார்கள். அவர்கள் இந்தியாவில் தாமாகவே கிளைப் பயணம் மேற்கொள்ள விரும்பினால் அதுவும் சாத்தியமாகலாம்.
  தகவல்: பேராசிரியர் மாதவன் தமிழில்: கோ. ஜெயபாண்டியன் | 
											
											
												 | 
											
											
	  | 
											
												More
  மிசௌரி தமிழ் சங்கம் பொங்கல் விழா விரிகுடாப் பகுதியில் 'சூழல் தினம்' சான் டியேகோ தமிழ்ச்சங்கம் பொங்கல் விழா மலிபு கோவிலில் தியாகராஜ ஆராதனை இளையராகம் குழுவினரின் 'சங்கீத மேகம்'
  | 
											
											
	  | 
											
												 | 
											
                                            
												| 
												
												
												 | 
											
                                            
											
											
                                            
												 | 
											
											
												| 
													
													
																											
												 | 
											
											
												| 
													
												 |