பொடி சமாச்சாரம்! சுக்குப் பொடி
|
|
|
|
தேவையான பொருட்கள் அரைத்த கிட்னி பீன்ஸ் (Refried beans can) - 1 டப்பா இட்லி ரவை - 1 கிண்ணம் மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி வெங்காயம் (நறுக்கியது) - தேவைக்கேற்ப கொத்துமல்லி (நறுக்கியது) - தேவைக்கேற்ப இஞ்சித்துருவல் - ஒரு தேக்கரண்டி சமையல் எண்ணெய் - தேவைக்கேற்ப உப்பு - சிறிதளவு
செய்முறை கிட்னி பீன்ஸ் டப்பாவில் இருப்பவற்றை ஒரு கிண்ணத்தில் கொட்டவும். அதில் இட்லி ரவை, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டுக் கலந்து கொள்ளவும். இதை ஐந்து நிமிடங்கள் ஊற வைத்தால் போதும். அடைமாவில், வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லி கலந்து ஒட்டாத (நான்-ஸ்டிக்) தோசைக்கல்லில் மெலிதாக அடை வார்க்கவும். சமையல் எண்ணெய் விட்டு மொறுமொறு என்று வார்த்து எடுக்கவும். இரு பக்கமும் வேக வைக்கவும். தேங்காய்ச் சட்னி, தக்காளிச் சட்னி, க்ரான்பெரி சட்னியோடு சாப்பிட்டால், ஆஹா! |
|
குறிப்பு: சிறிதளவு தண்ணீரில் 1/2 கிண்ணம் உலர்ந்த க்ரான்பெரியை ஒரு நிமிடம் மைக்ரோ ஓவனில் வேகவைத்து அதில் 2 மிளகாய் வற்றல், உப்பு, ஒரு சிட்டிகை பெருங்காயப் பொடி போட்டு மிக்ஸியில் அரைத்தால் க்ரான்பெரி சட்னி ரெடி.
பிரேமா நாராயணன், ஷாம்பர்க், இல்லினாய்ஸ் |
|
|
More
பொடி சமாச்சாரம்! சுக்குப் பொடி
|
|
|
|
|
|
|