லெமான்ட் கோவிலில் தங்கமுருகன் விழா அட்லாண்டா AID வழங்கும் 'நவவித பக்தி'
|
|
சிகாகோவில் 'சங்கம் முதல் ஷேக்ஸ்பியர் வரை' |
|
- |டிசம்பர் 2009| |
|
|
|
|
டிசம்பர் 13, 2009 ஞாயிறு அன்று மாலை 3 மணிக்கு 'சங்கம் முதல் ஷேக்ஸ்பியர் வரை' என்ற நடன நிகழ்ச்சியைச் சிகாகோவைச் சேர்ந்த நர்த்தகி கலை சந்திரா அவர்கள் அரோரா பாலாஜி கோவிலில் வழங்க உள்ளார். இதில் 'சங்கமும் சுனாமியும்', 'பஹூலியா' என்ற இரண்டு பரதக்கலைத் தொகுப்புகள் இடம் பெறும்.
சங்க இலக்கியத்தில் ஆழந்த ஈடுபாடு கொண்ட கலை சந்திரா, சங்கக் கவிஞர் கபிலர், கொடைவள்ளல் பாரி மேல் பாடிய கவிகளைத் தேர்ந்தெடுத்து, தான் புனைந்த 'சுனாமி' என்னும் கவிதையை அதனுடன் தொடுத்து, அதற்கு நடன வடிவம் தந்துள்ளார், 'சங்கமும் சுனாமியும்' என்ற ஓரங்க நடனத்தில்.
இதற்கெனவே இசை அமைத்தவர் கலாக்ஷேத்திராவில் ஊறித் திளைத்த ஜி.எஸ். ராஜன். இவர் வட இந்தியக் கருவி பான்சூரியில் கர்நாடக இசையை வாசிப்பதில் வல்லவர். குரலிசை வழங்குகிறார் ரம்யா சுந்தரேசன்.
தொடர்ந்து வரும் 'பஹூலியா' என்னும் ஒன்பது மொழிக் கவிதை மாலையை வழங்க வருகிறார் செயின்ட் லூயிஸ் மிசௌரியைச் சேர்ந்த முன்னணி நடன ஆசிரியர் குரு பிரசன்னா. இவர் சிறந்த இசைக் கலைஞரும் கூட. இவரது இசையமைப்பில் ஒலிக்கப் போகின்றன, ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியரின் சொனட்டும், இஸ்லாமியக் கவி காஜி நூருல் இஸ்லாம் அவர்கள் சிவசக்தியின்பால் கொண்ட பக்தியால் கசிந்த வங்காள மொழிக் கவிதையும்.
பிரபல குரு ஹேமா ராஜகோபாலனின் மாணவி கலை சந்திரா என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சிக்கான ரசிகர்களின் காணிக்கை அனைத்தும் சிகாகோ பாலாஜி கோவிலுக்குச் சமர்ப்பிக்கப்படும். |
|
அனுமதி இலவசம் தொடர்புக்கு: கலை சந்திரா - 847.477.0834 மின்னஞ்சல்: calaichandra@gmail.com இணைய தளம்: www.sooryasance.com
செய்திக்குறிப்பிலிருந்து |
|
|
More
லெமான்ட் கோவிலில் தங்கமுருகன் விழா அட்லாண்டா AID வழங்கும் 'நவவித பக்தி'
|
|
|
|
|
|
|